பாலி எரிமலை: எச்சரிக்கையை மீறி வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம்
இந்தோனீசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலையின் சீற்றம் தீவிரமடைந்துள்ளதையடுத்து, இன்னும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறாத மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என இந்தோனீசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை. எரிமலைக்கு தொலைவில் உள்ள பாதுகாப்பான இடங்களில் சிலர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், மற்றவர்கள் தங்களது கால்நடைகளை விட்டுவர விரும்பவில்லை.
இரண்டாம் நாளாக பாலி விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பகுதியான இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கியுள்ளனர்.. ரத்து செய்யப்பட்ட 445 விமானங்களால் 59 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பாலி எரிமலை சீற்றம்: மக்களை வெளியேற்றும் பணி தீவிரம்
- சீறும் எரிமலை- அச்சத்தில் அழகிய பாலி தீவு (புகைப்படத் தொகுப்பு)
சாம்பல் விழுந்துள்ள பகுதிகளில், அதிகாரிகள் முகமுடிகளை விநியோகம் செய்து வருகின்றனர். மேலும், மலையை சுற்றியுள்ள விலக்கு மண்டலத்தின் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
எரியும் பாறைகளின் தீக்குழம்பு மலையில் மேலிருந்து கீழே பாய்ந்து வருவது காணப்பட்டது. இதனால் இதனை சுற்றுயுள்ள பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால், திங்கட்கிழமையன்று 40,000 பேர் மட்டுமே வெளியேறினர்.
மலை உச்சியின் மேலிருந்து 3,400 மீட்டர் வரை கரும்புகை சூழ்ந்துள்ளது.
எரிமலையில் இருந்து தொடர்ந்து சாம்பல் துகள்கள் வெளிப்படுவதை காண முடிகிறது. வெடிப்பின் சத்தம், மலை உச்சியிலிருந்து 12 கிலோ மீட்டர் வரை கேட்கப்படுகிறது
தண்ணீரோடு கலந்துள்ள குளிர்ந்த தீக் குழம்புகளை எரிமலைக்கு அருகில் உள்ள வயல்கள் மற்றும் ஆறுகளில் காண முடிகிறது.
கனமழை காரணமாக இந்த குளிர்ந்த தீக்குழம்புகள் அதிகரிக்கக்கூடும் மற்றும் ஆகுங் மலையில் இருந்து பாறைகளும் தொடர்ந்து வெளியேற்றப்படும் என தேசிய பேரிடர் மேலான்மை ஆணையத்தின் பிரதிநிதி சுடோபோ பூர்வோ நூக்ரோஹோ எச்சரித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதமே எரிமலை வெடிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், மக்களை கூட்டமாக வெளியேற்றினர். எச்சரிக்கை நிலை குறைந்ததையடுத்து அக்டோபரில் மக்கள் வீடு திரும்பினர்.
பிற செய்திகள்:
- தென் கொரியா: ஒரு தேர்வுக்கு இவ்வளவு அக்கப்போரா?
- பாலி எரிமலை சீற்றம்: மக்களை வெளியேற்றும் பணி தீவிரம்
- தமிழகத்தில் இரண்டு மாதங்களில் 2000 கிலோ கஞ்சா பிடிபட்டது
- தனது காதலியை கரம்பிடிக்கும் இளவரசர் ஹாரி
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக















Click it and Unblock the Notifications