பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்!
Recommended Video
குவெட்டா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வீழ்த்தியதை பெருமகிழ்வாக கொண்டாடி குதூகலித்திருக்கின்றனர் பலுசிஸ்தான் மக்கள்.
பாகிஸ்தானில் தனிநாடு கோரி போராடி வருகின்றனர் பலுசிஸ்தான் மக்கள். இந்த தனிநாடு கோரிக்கையை இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது என்பது பாகிஸ்தானின் குற்றச்சாட்டு.
பலுசிஸ்தான் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக வெளிநாடு வாழ் பலுசிஸ்தான் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவை ஆதரிக்கும் பலுசிஸ்தான்
பலுசிஸ்தான் மக்கள் இந்தியாவுக்கு ஆதரவான நிலையில்தான் உள்ளனர். இதனால்தான் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போன்றவர்கள் பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தை உருவாக்கியது போல பலுசிஸ்தான் உள்ளிட்ட மேலும் சில நாடுகளாக துண்டாக்க வேண்டும் என பேசி வருகின்றனர்.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
இதனிடையே உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று மோதின. இந்த ஆட்டத்தை விளையாட்டு வீரர்கள் ஒரு விளையாட்டாகவே கருதினர். இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

பாக். மீது தாக்குதல்- அமித்ஷா
ஆனால் விளையாட்டிலும் அரசியல் செய்யும் சக்திகள்தான் தேசப்பற்றின் பெயரால் கொண்டாடி மகிழ்ந்தனர். உள்துறை அமைச்சர் அமித்ஷாவே கூட, பாகிஸ்தான் மீதான இன்னொரு தாக்குதல் எனக் குறிப்பிட்டிருந்தார்.
|
பலுசிஸ்தான் மக்கள் கொண்டாட்டம்
பாகிஸ்தானின் தோல்வியை இந்தியர்களைவிட பலுசிஸ்தானத்து மக்கள்தான் அதிகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். பலுசிஸ்தானைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர். #DefeatIsPakistanDestiny #IndiaVsPakistan ஆகிய ஹேஷ்டேக்குகளில் பலுசிஸ்தானியர்கள் பாகிஸ்தானின் தோல்வியை பெருமகிழ்வாக கொண்டாடினர். Banuk Zarina Baloch என்ற பலுசிஸ்தான் செயற்பாட்டாளர் பதிவிட்ட ஒரு டிக்டாக் வீடியோ வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

தமிழிசை ரீ ட்வீட் செய்த வீடியோ
அந்த வீடியோவில் பலுசிஸ்தானத்துக்கு 2 பிஞ்சு குழந்தைகள் இந்திய தேசியக் கொடியையும் பலுசிஸ்தானத்து கொடியையும் கைகளில் ஏந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதை பாஜக தலைவர்கள் பலரும் பகிர்ந்துள்ளனர். Karuna Gopal என்ற பாஜக தலைவர் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ரீ ட்வீட்டும் செய்திருக்கிறார் என்பது குரிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
