Baloch Women: பாகிஸ்தான் ராணுவத்தை கொன்று குவிக்கும் பலூச் பெண்கள்.. கொதித்தெழுந்தது ஏன்? பின்னணி
இஸ்லாமாபாத்: பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக சமீப காலமாக தாக்குதல்களை முன்னெடுப்பதில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். திடீரென மக்கள் காணாமல் போனது, தங்களுக்கு எதிரான சுரண்டல்களுக்கு எதிராக அமைதி போராட்டத்தில் ஈடுபட்ட பலோச் மக்கள், அது தோல்வி அடைந்ததால் தற்போது, பெண்களும் ஆயுதம் ஏந்த தொடங்கியுள்ளனர். ஆண்கள் சிறை மற்றும் கொலை செய்யப்படுவதால் வெகுண்டெழுந்து தற்கொலைப்படையாகவும் பெண்கள் மாறி வருகிறார்கள்.
பாகிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தனி நாடு கோரி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பலுசிஸ்தான் விடுதலைப் படையை சேர்ந்த தாக்குதல் நடத்தியவர்களில் இருவரின் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலைப் படையில் பெண்கள்
அவர்கள் இருவரும் பெண்கள் ஆவர். ஒருவர் ஆசிபா மெங்கல் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். தடை செய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலைப் படையை சேர்ந்த, மெங்கல், பலூசிஸ்தானில் உள்ள நுஷ்கியைச் சேர்ந்தவர். தனது 21 வது வயதில் இதன் மஜீத் படைப்பிரிவில் சேர்ந்தார். ஜனவரி 2024-ல் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் பிரிவில் சேர்ந்தார். தாக்குதல் நடத்திய மற்றொரு பெண்ணின் பெயர் இன்னும் தெரியவில்லை.
தாக்குதலை நடத்துவதற்கு முன்பு அவர்கள் இருவரும் பாகிஸ்தான் அரசை கேலி செய்வது போன்ற ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 17 பாதுகாப்புப் படையினர் உட்பட 50 பேர் கொல்லப்பட்டனர். பலூசிஸ்தானில் காலம் காலமாக ஆயுதமேந்தி ஆண்கள்தான் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பெண்கள் தற்கொலைப்படையாக மாறி தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
புதிய தந்திரங்களுக்கு ஏற்ற மாற்றங்கள்
பலோச் எதிர்ப்பு இயக்கம் முன்பு இருந்தது போல ஆண்கள் மட்டுமே முன்னிலை வகிக்கும் பழங்குடி கிளர்ச்சி குழுவாக இல்லை என்ற கேள்வி எழத்தொடங்கியுள்ளது. இதற்கு ராணுவம் மேற்கொண்ட கடுமையான அடக்குமுறைகளே காரணமாக சொல்லப்படுகிறது.
அதாவது, பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலோச்சிஸ்தானுக்கு எதிரான அந்நாட்டு அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறைகள், மக்கள் மனங்களில் தேங்கிய கோபம், நம்பிக்கையிழப்பு, மேலும் போராட்டத்தின் புதிய தந்திரங்களுக்கு ஏற்ற மாற்றங்கள் ஆகியவை இதற்கு காரணமாக சொல்கிறார்கள்.
கராச்சி பல்கலைக்கழக தாக்குதல்
பலோசிஸ்தான் கிளர்ச்சிக்குழுவில் (BLA) பெண்கள் வெளிச்சத்துக்கு வருவது இது முதல்முறை அல்ல. பலோச் இனச் சிறுபான்மையைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தற்கொலைத் தாக்குதலாளர்களாக மாறி வருகின்றனர். இது பாகிஸ்தானின் பாதுகாப்பு நலன்களையும் அதன் பாதுகாப்பு அமைப்புகளையும் கடுமையாக பாதிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு கராச்சி பல்கலைக்கழக தாக்குதல் மூலம் பெண்கள் தாக்குதலில் ஈடுபட்ட நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்தது. 2022 ஏப்ரலில், இரண்டு குழந்தைகளின் தாயும், முதுநிலைப் பட்டம் பெற்றவருமான 30 வயதுடைய ஷாரி பலோச், கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள கான்ஃப்யூசியஸ் இன்ஸ்டிடியூட்டின் வெளியே தன்னைத் தானே வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தினார்.
சுமையா கலந்த்ராணி பலோச்
இந்த தாக்குதலில் மூன்று சீனர்களும், ஒரு பாகிஸ்தானிய டிரைவரும் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அதேபோல், 2022 ஜூன் மாதத்தில், பலோச் விடுதலை ராணுவத்தின் முதல் தற்கொலைப்படை நபருமான ரெஹான் பலோச் என்பவருக்கு நிச்சயமாக்கப்பட்டவருமான சுமையா கலந்த்ராணி பலோச் என்ற பெண் பத்திரிகையாளர் பலுசிஸ்தானின் துர்பத் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ பேரணியை குறிவைத்து தாக்குதலை நடத்தினார். ரெஹான் பலோச் 2018-ஆம் ஆண்டு நடந்த தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications