For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் நட்சத்திர ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல்.. சீனர்கள் மீது குறி.. ராணுவம் குவிப்பு!

பாகிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலில் நேற்று இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நட்சத்திர ஹோட்டலில் நேற்று இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கவ்தார் துறைமுக நகரில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அங்கு பலுசிஸ்தான் விடுதலைக்காக நிறைய போராளி குழுக்கள் இயங்கி வருகிறது. இதனால் அங்கு இது போல அடிக்கடி தாக்குதல் நடந்து வருகிறது.

Balochistan Liberation Army attacked in Pakistans port city of Gwadar

நேற்று இரவு அந்த பகுதிக்கு காரில் வந்த மூன்று தீவிரவாதிகள், குவாடர் பகுதியில் இருக்கும் பேர்ல் காண்டினெண்டல் ஹோட்டலில் தாக்குதல் நடத்தினார்கள். காரில் இறங்கிய தீவிரவாதிகள் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

புதுவை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்குகள், பச்சை கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கைபுதுவை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்குகள், பச்சை கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கை

அதன்பின் ஹோட்டலை நோக்கி துப்பாக்கியால் சுட்டு உள்ளே நுழைய முயன்றனர். அந்த ஹோட்டலில் நிறைய சீன அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்கள் தங்கி இருக்கிறார்கள். இந்த பகுதி சீனா - பாகிஸ்தான் வர்த்தகம் நடக்கும் முக்கியமான இடங்களில் ஒன்றாகும்.

இந்த நிலையில் அங்கிருந்த ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்று இருக்கிறார்கள். ஆனால் அங்கு பாதுகாவலுக்கு இருந்த காவலர்கள் மீண்டும் தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர். இதில் மூன்று தீவிரவாதிகளும் அங்கேயே கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பலுசிஸ்தான் லிபரேஷன் ஆர்மி இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பலியாகவில்லை. இந்த தாக்குதல் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

English summary
Balochistan Liberation Army attacked in Pakistan's port city of Gwadar: 3 terrorists killed in the attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X