பள்ளி மீது விழுந்து நொறுங்கிய போர் விமானம்.. 16 பேர் பலி! வங்கதேசத்தில் ஷாக்!
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் பள்ளி ஒன்றின் மீது போர் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்திருக்கின்றனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான F7 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்திருக்கிறது. விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இன்னும் முழு விவரம் வெளியாகியுள்ளது. டாக்காவில் உள்ள மைல்கல் பள்ளி வளாகத்தில் இந்த சோக சம்பவம் நடந்திருக்கிறது.

விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கும் தீயணைப்பு அதிகாரி லிமா கானம் கூறுகையில், "இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர்" என்று கூறியிருந்தார். இருப்பினும், இது குறித்த மேலதிக தகவல்களை அவர் வழங்கவில்லை.
இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 16ஆக அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் பள்ளியின் மீது மோதியவுடன் தீப்பிடித்தது. தூரத்தில் இருந்து பார்த்தாலே புகை வெளியேறுவதை காண முடிந்தது என்று ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்தது. தீயை அணைக்க எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கின்றனர்.
விபத்துக்குப் பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில், புல்வெளி அருகே பெரிய தீப்பிழம்பு எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து கரும்புகை வெளியேறியது. தூரத்தில் இருந்து மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. விபத்து நடந்தபோது மைல்கல் பள்ளியில் குழந்தைகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்துக்குள்ளான எஃப்-7 பிஜிஐ விமானம், அந்நாட்டின் விமானப்படைக்கு சொந்தமானது என் வங்கதேச ராணுவ வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர் யார்? மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்தும் கேள்விகள் எழுந்திருக்கின்றன.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மீது ஏர் இந்தியா விமானம் மோதி விபத்துக்குள்ளான ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேரும், விமானம் மோதிய கட்டிடத்தில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications