இந்தியாவிற்கு எதிரான எந்த செயலையும் வங்கதேசம் அனுமதிக்காது.. பிரதமர் ஷேக் ஹசீனா உறுதி
இந்தியாவிற்கு எதிரான எந்த செயலையும் வங்கதேசம் அனுமதிக்காது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் உடன் நடந்த சந்திப்பின் போது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
டாக்கா: இந்தியாவிற்கு எதிரான எந்த செயலையும் வங்கதேசம் அனுமதிக்காது அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை திங்கட்கிழமை சந்தித்து பேசினார்.

அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது, வங்கதேச விடுதலை போரின் போது இந்தியா செய்த உதவிக்கு வங்கதேசத்தின் சார்பில் பிரதமர் ஷேக் ஹசீனா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும், இந்தியாவின் நட்பை வங்கதேச மக்கள் மதிப்பதாகவும், இந்தியாவிற்கு எதிரான எந்த செயல்களுக்கும் வங்கதேசம் இடம் தராது என அவர் உறுதியளித்துள்ளார். இதையடுத்து, இம்மாதம் இந்தியா வரும் ஷேக் ஹசீனா இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
ராணுவ தளபதி பிபின் ராவத் முன்னதாக அந்நாட்டு முப்படை தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து அவர் வங்கதேச விடுதலைப்போரின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக களமிறங்கிய இந்திய ராணுவத்தில் தான் அப்போது பணியாற்றிய போக்ரா ராணுவ முகாமுக்குச் சென்று பார்வையிட்டார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications