ஷேக் ஹசீனாவுக்கு அடிமேல் அடி.. ஊழல் வழக்கில் 21 ஆண்டு சிறை! வங்கதேசம் நாடு கடத்தப்படுகிறாரா? விவரம்
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான 3 ஊழல் வழக்கில் இன்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் தனித்தனியாக தலா 7 ஆண்டு சிறை தண்டனை என்று மொத்தம் 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அடுத்தடுத்து பிற வழக்குகளில் தீர்ப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான், இந்தியாவில் இருந்து ஷேக் ஹசீனா நாடு கடத்தப்படுகிறாரா? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையை தொடர்ந்து அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார்.

மேலும் ஷேக் ஹசீனா மீது பல்வேறு ஊழல், முறைகேடு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அடுத்தடுத்து நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் புர்பச்சலில் உள்ள ராஜுக் நியூ டவுன் வீட்டு வசதி திட்டத்தில் அரசு நிலம் ஒதுக்கியதில் ஊழல் செய்ததாக ஷேக் ஹசீனா மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அதாவது ஷேக் ஹசீனா எந்த முன்னறிவிப்பும் இன்றி தனது பெயரில் காலி மனையை ஒதுக்கீடு செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் மகன் சயிப் வாஜித் ஜாய், மகள் சைமா வாஜித் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கூறப்படுகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குகளில் டெங்கிலிஷாகா சிறப்பு நீதிபதி நீதிமன்றம் -5 நீதிபதி முகமது அப்துல்லா அல் மாமுன் இன்று தீர்ப்பு வழங்கினார்.
அப்போது புர்பச்சலில் உள்ள ராஜுக் நியூ டவுன் திட்டத்தில் ஊழல் தொடர்பான மூன்று வழக்குகளில் தனித்தனியாக தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். அதோடு இந்த தண்டனையை தொடர்ச்சியாக அவர் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன்மூலம் ஷேக் ஹசீனாவுக்கு மொத்தம் 21 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு வங்கதேச பணத்தில் ஒரு லட்சம் டாகா அபராதமாக விதிக்கப்பட்டது. இதனை செலுத்த தவறினால் கூடுதலாக 18 மாதங்கள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஷேக் ஹசீனா மட்டுமின்றி அவரது மகன் சயிப் வாஜித் ஜாய், மகள் சைமா வாஜித் ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருவருக்கும் ஒவ்வொரு வழக்குகளிலும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கும் தலா ஒரு லட்சம் டாகா அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனை செலுத்த தவறினால் தலா ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஏற்கனவே ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில் அவருக்கு வங்கதேச சிறப்பு தீர்ப்பாயம் மரண தண்டனையை வழங்கி இருந்தது. தற்போது ஊழல் வழக்கில் 21 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது ஷேக் ஹசீனாவுக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது. இதற்கிடையே தான் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு நம்மிடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் நம் நாடு இன்னும் பாசிட்டிவான பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து ஷேக் ஹசீனா நம்நாட்டிலேயே பாதுகாப்பாக இருந்து வருகிறார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications