முஷ்டியை முறுக்கியும் பயனில்லை.. இந்தியாவிடம் மொத்தமாக சரண்டர் ஆன வங்கதேசம்!
டாக்கா: வங்க தேசத்தில் ஹேக் ஹசீனா வெளியேற்றப்பட்டதில் இருந்தே, இந்திய - வங்கதேச உறவில் நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் இந்தியாவுடன் இணக்கமாக செல்வதை தவிர வேறு வழியில்லை என்று வங்கதேச அரசு தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார். தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின்போது, இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் வங்கதேசம், ஷேக் ஹசீனாவின் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு மிகவும் இணக்கமான நாடாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டம் காரணமாக அங்கு நிலைமை கையை மீறி சென்றது.

வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்
வரலாறு காணாத வன்முறையால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். வங்கதேசத்தில் இடைக்கால அரசு தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. நோபல் பரிசு வென்ற முகம்மது யூனுஸ் ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறார். இவர் பதவியேற்றதில் இருந்து வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.
அதுமட்டும் இன்றி, வங்கதேச சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக பாகிஸ்தானுடன் வர்த்தக உறவை மேம்படுத்தியது. இதுபோன்ற செயல்பாடுகளால் இந்தியாவுக்கு வங்கதேசத்திற்கும் இடையேயான உறவில் கசப்புணர்வு ஏற்படும் சூழல் உருவானது. வங்கதேசத்தை பொறுத்தவரை நான்கில் மூன்று பக்கம் இந்திய மாநிலங்களை எல்லையாக கொண்டுள்ளது. இதனால் பூகோள ரீதியாகவும் இந்தியாவுக்கு மிக முக்கிய நாடாக வங்கதேசம் உள்ளது. இதனால், அந்த நாட்டின் நடைபெறும் எந்த ஒரு மாற்றத்தையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இணக்கமாக செல்வதை தவிர வேறு வழியில்லை
இந்த நிலையில்தான் இந்தியாவுடன் இணக்கமாக செல்வதை தவிர வேறு வழியில்லை என்று வங்கதேச அரசு தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தாய்லாந்தில் அடுத்த மாதம் நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்த ஆலோசனை செய்வோம். இருநாடுகளுக்கும் இடையேயான உறவு சிறப்பாக உள்ளது.
இது எதிர்காலத்திலும் தொடரும். இந்தியாவுடன் நல்லுறவுடன் இருப்பதை தவிர வங்கதேசத்திற்கு வேறு வழியில்லை. இருநாடுகளும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது. வரலாறு, அரசியல், பொருளாதாரம் என அனைத்திலும் சார்ந்து இருப்பதால் எங்களை தனிமைப்படுத்த முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள தவறான புரிதலை சமாளித்து மீண்டு வர முயற்சி நடைபெற்று வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications