கதறப்போகும் வங்கதேசம்.. டிரம்பால், முகமது யூனுசுக்கு பெரிய சிக்கல்? இந்தியாவுக்கு ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

டாக்கா: நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வரும் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுசுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் பெரிய சிக்கல் ஏற்படலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

வங்கதேசம்.. நம் நாட்டு ராணுவம் தான் பாகிஸ்தானில் இருந்து சுதந்திரம் பெற்று கொடுத்து உருவாக்கிய அண்டை நாடு. இதனால் வங்கதேசத்துக்கும், நம் நாட்டுக்கும் இடையே நல்ல உறவு என்பது நீண்டகாலமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அப்படியான சூழல் இல்லை. நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

https tamil oneindia com jobs hcl-weekend-drive-for-health-care-voice-inbound-and-outbound-in-25th-january-in-chennai-673607 html

வங்கதேச பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகு அங்கு இடைக்கால அரசு அமைந்தது. இந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டார். வங்கதேசத்தை சேர்ந்த முகமது யூனுஸ் அமெரிக்காவில் வசித்து வந்தார். வங்கதேசத்தில் போராட்டம் நடத்தியவர்கள் தான் முகமது யூனுஸை மீண்டும் அழைத்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்க ஒப்புக்கொண்டனர்.

இந்த தலைமை ஆலோசகர் பொறுப்பை ஏற்றதில் இருந்தே நம் நாட்டுடன் முகமது யூனுஸ் தொடர்ந்து மோதி வருகிறார். தற்போது இருநாடுகள் இடையேயான உறவு என்பது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமாகி உள்ளது. பாகிஸ்தான், சீனாவுடன் உறவை வலுப்படுத்துவதோடு, நம் நாட்டு எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் இந்த முகமது யூனுஸ். இந்நிலையில் தான் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்பால், முகமது யூனுசுக்கு பெரிய சிக்கல் ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது என்ன வாங்க பார்க்கலாம்.

வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருப்பவர் முகமது யூனுஸ். இவர் பன்முகம் கொண்டவர். பொருளாதார நிபுணர். தொழிலதிபர். அரசியல்வாதி மற்றும் சமூக ஆர்வலராக அறியப்படுகிறார். இவருக்கு கடந்த 2006ம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. வங்கதேசத்தில் வறுமை தலைவிரித்தாடியபோது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது கிராமீன் பேங்க் என அழைக்கப்படும் கிராம வங்கி மூலம் மைக்ரோ கிரெடிட் மற்ம் மைக்ரோ பைனான்ஸ் மூலம் பலரையும் தொழில் முனைவோராக மாற்றினார். அதனடிப்படையில் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் ‛ஏழைகளின் வங்கியாளர்' என பாராட்டப்பட்டார். கிராம வங்கி மூலம் நம் நாட்டு மதிப்பில் ரூ.8000 அளவிலான கடன்களை 9 கோடி ஏழைகளுக்கு வழங்கியிருந்தார். அதேபோல் கிராமீன் டெலிகாம் நிறுவனம் மூலம் லட்சக்கணக்கானவர்களின் செல்போன் வாங்க வழிவகுத்தார். அதோடு ரூ.18 கோடி கையாடல் செய்ததாகவும் புகார் செய்ப்பட்டது. த்தின் பங்களிப்பு காரணமாக 1997 முதல் 2007ஆம் ஆண்டிற்குள் 50 ஆயிரம் கிராமங்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேரின் கைகளில் செல்போனை கொண்டு சேர்த்தார்.
2007ல் நாகரிக் சக்தி என கட்சி தொடங்கியதோடு அதனை கலைத்தார்.

இதுபோன்ற செயல்கள் மற்றும் ஷேக் ஹசீனாவின் தீவிர எதிர்ப்பாளர் என்பதால் தான் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக மாணவர்கள் அவரை தேர்வு செய்தனர். இந்நிலையில் தான் முகமது யூனுசுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூலம் பெரிய சிக்கல் வரலாம் என்று கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் முகமது யூனுஸ் தான். அதாவது முகமது யூனுஸ் அடிப்படையில் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் ஆதரவாளர். ஆனால் டொனால்ட் டிரம்ப் குடியரசு கட்சியை சேர்ந்தவர்.

அதுமட்டுமின்றி ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹிலாரி கிளின்டனுடன் நல்ல நட்பில் இருப்பவர் முகமது யூனுஸ். அதேபோல் ஹிலாரி கிளின்டனின் கணவரான அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனுடன் நெருக்கமாக இருப்பவர். கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டன் தான், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை எதிர்த்து களமிறங்கினர். இதில் ஹிலாரி கிளின்டன் தோற்ற நிலையில் டிரம்ப் அதிபர் ஆனார்.

தேர்தல் சமயத்தில் ஹிலாரி கிளின்டனுக்கு, முகமது யூனுஸ் நன்கொடைவழங்கினார். சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கினார். இந்த நன்கொடை ஹிலாரி கிளின்டனுக்கு சொந்தமான அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. இது டொனால்ட் டிரம்புக்கு, முகமது யூனுஸ் மீது கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது நன்கொடை தொடர்பான விவரங்கள் ஹிலாரி கிளின்டனின் அறக்கட்டளைக்கான இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

அதேபோல் அமெரிக்காவின் அதிபராக பராக் ஒபாமா 2வது முறையாக பதவி வகித்த 2009 முதல்2013 காலத்தில் ஹிலாரி கிளின்டன், அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டார். அப்போது முகமது யூனுசுக்கு மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் கடனாக வழங்கப்பட்டது. அதேபோல் முகமது யூனுஸின் மகள் பெயர் மோனிகா யூனுஸ். இவர் அமெரிக்காவில் வசித்து வருவதால் முகமது யூனுஸ் அடிக்கடி அங்கு சென்று வந்தார். மகள் மோனிகா யூனுசும், ஹிலாரி கிளின்டனுன் நெருக்கமாக உள்ளார்.

இதனால் தற்போது டொனால்ட் டிரம்ப் சார்பில் முகமது யூனுஸ் தொடர்பான விவகாரங்கள் பற்றிய விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கபடலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ள முகமது யூனுஸை, டொனால்ட் டிரம்ப் புறக்கணிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனென்றால் முகமது யூனுஸ் மீது வங்கதேசம் உள்பட பல நாடுகளில் முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த முறைகேடு புகார்கள் அனைத்தும் அரசில் உள்நோக்கத்தால் புனையப்பட்டது என்று முகமது யூனுஸ் கூறி வருவது இங்கே கவனிக்கத்தக்கது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அந்த சமயத்தில் ஒரு முக்கிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதாவது முகமது யூனுஸ் தான் ஜோ பைடன் மற்றும் ஹிலாரி கிளின்டன் உதவியுடன் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனை ஜோ பைடன் அரசு முற்றிலுமாக மறுத்தது.

இருப்பினும் இந்த குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் ஜனநாயக கட்சி மற்றும் ஹிலாரி கிளின்டனுடன் முகமது யூனுசுக்கு இருக்கும் முக்கிய தொடர்பு தான். இதனால் டொனால்ட் டிரம்ப்பால், முகமது யூனுசுக்கு விரைவில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது நடக்கும் பட்சத்தில் வங்கதேச இடைக்கால அரசு சிக்கலில் சிக்கும். இதன்மூலம் தேவையின்றி நம் நாட்டுடனான எல்லை பிரச்சனை செய்யும் வங்கதேசம் வாலை சுருட்டி கொண்டு அமைதியாகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+