வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது! ஷேக் ஹசீனா நிலைமை என்ன?
டாக்கா: கடந்த ஆண்டு நடந்த GenZ போராட்டத்தால் வங்கதேசத்தி ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி வீழ்த்தப்பட்டது. உயிருக்கு பயந்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார். இந்நிலையில் வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
வங்கதேசத்தின் 13வது நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நடைபெறும் என, அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உத்தீன் அறிவித்துள்ளார். முக்கிய ஜனநாயக சீர்திருத்தங்கள் குறித்த தேசிய வாக்கெடுப்பும் அதே நாளில் நடத்தப்படும் என அவர் நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாகத் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மாணவர் போராட்டங்களால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. நோபல் பரிசு வென்ற முஹம்மது யூனுஸ் தலைமையில் தற்போது இடைக்கால அரசு ஆட்சி செய்து வருகிறது. இவர் தேர்தலுக்குப் பிறகு பதவி விலகுவார்.
மூன்று முறை பிரதமராக இருந்த கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) தேர்தலில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கலீதா ஜியா உடல்நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மகன் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளாக பிரிட்டனில் நாடு கடந்து வாழ்ந்து வருகிறார். அவர் இன்னும் திரும்பவில்லை.
அதேபோல ஷேக் ஹசீனா இந்த தேர்தலில் களமிறங்க திட்டமிட்டிருக்கிறார். வெற்றி பெற்றால் நாடு திரும்பலாம் என்றும் அவர் எதிர்பார்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications