சீனாவுடன் உறவை ஆழப்படுத்தும் வங்கதேசம்! முதலீடுகளை குவிக்க புதிய திட்டம்
பெய்ஜிங்: ஒரு காலத்தில் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வந்த வங்கதேசம் தற்போது சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. 4 நாட்கள் பயணமாக சீனா சென்றிருந்த வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ், சீனாவுடனான உறவுகளை புதிய கட்டத்திற்கு உயர்த்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
சீனாவுடனான வங்கதேசத்தின் உறவு ஆசியாவில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. குறிப்பாக இந்தியா இந்த உறவை கூர்ந்து கவனித்து வருகிறது.

யூனுஸின் 4 நாட்கள் சீன பயணத்தின் போது சில முக்கிய விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. முதல் விஷயம் தீஸ்தா நதி விவகாரத்தில் சீன நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்திருந்தது. இரண்டாவது விஷயம் வளைகுடா பகுதியில் முதலீடு செய்ய சீனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது. இது இரண்டுமே இந்தியாவுக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. தீஸ்தா நதி விவகாரத்தில் சீனா மூக்கை நுழைத்தால், நதி மீதான இந்தியாவின் உரிமை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த நதி இந்தியாவில்தான் அதிகமான தூரம் ஓடுகிறது. வங்கதேசத்தில் குறைவான தூரம் மட்டுமே ஓடுகிறது. இப்படி இருக்கும்போது இதன் மீதான அதிகாரம் இந்தியாவுக்கே அதிகம் என்று நாம் கூறி வருகிறோம். ஆனால் சீனா முதலீடு என்கிற பெயரில் உள்ளே நுழைந்தால் உரிமை விஷயத்தில் பெரும் பஞ்சாயத்து நடக்கும்.
இரண்டாவது விவகாரத்தை பொறுத்த அளவில், வங்கக்கடல் மீது நமக்கு ஏராளமான அதிகாரம் இருக்கிறது. இதைவிட முக்கியம் வங்கதேசம் இப்போது வரை நமக்கு வணிக பங்காளியாக இருக்கிறது. இந்த வணிகத்திற்கு வங்கக்கடல் மிகுந்த உதவியாக இருக்கிறது. ஆனால் சீன முதலீடுகள் வந்துவிட்டால் நமக்கும் வங்கதேசத்திற்கும் இருக்கும் தொடர்பு குறைய ஆரம்பித்துவிடும். இது வங்கக்கடல் மீதான நமது பயன்பாட்டை வெகுவாக குறைத்துவிடும். தவிர சீனாவும், வங்கதேசமும் இணைவது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய அச்சுறுத்தலாக அமையும்.
இருப்பினும் இது எல்லாம் உடனே நடந்துவிடாது. சீனா எடுத்தவுடன் வங்கதேசத்தில் முதலீடு செய்துவிடாது. காரணம் வங்கத்தில் நிலவும் அசாதாரண சூழல்தான். அங்கு அரசியல் குழப்பங்கள் அதிகம் இருக்கிறது. இப்படியான நாட்டில் எந்த தொழில்களும் உருப்படியாக நடக்காது. எனவே யாரும் முதலீடு செய்ய யோசிக்க மாட்டார்கள். சீனாவும்தான்.
வேண்டுமெனில், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் சீனா முதலீடு செய்யலாம். வங்கத்திலிருந்து சிகிச்சைக்காக அதிகமான அளவில் அந்நாட்டு மக்கள் இந்தியாவுக்கு வருகின்றனர். இதனை தடுக்க குன்மிங் நகரில் மருத்துவமனைகளை உருவாக்க சீனா திட்டமிட்டு வருகிறது. சிட்டகாங்-குன்மிங் நேரடி விமான சேவையை சீனா தொடங்கும். இருப்பினும் விமான கட்டணம் அதிகமாக இருப்பதால் அது சாமானிய மக்களுக்கு பயன் தராது. இவ்வளவையும் இந்தியா நேடியாக கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications