மனைவியே என்றாலும் "அது"க்கு தடை போட்ட தாலிபான்கள்.. இப்ப அடுத்த உத்தரவு பாருங்க.. மலைத்த மீடியாக்கள்

Subscribe to Oneindia Tamil

காபூல்: 2021ம் ஆண்டிலிருந்தே ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இப்போதும் ஒரு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழக்கம்போல் உலக நாடுகள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து கொண்டிருக்கிறார்கள். பெண்கள் யாருமே வேலைக்கு செல்லக்கூடாது. தனியாக வெளியே நடமாடக்கூடாது, அப்படியே வீட்டை விட்டு வெளியேறினாலும், ஆண்களின் துணையுடன் தான் வரவேண்டும்,

afghanistan taliban living thing television

கட்டுப்பாடுகள்: மாணவிகளுக்கு உயர்நிலை பள்ளிகளில் அனுமதி மறுப்பு, தொடக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக வகுப்புகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பூங்காக்களிள் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக செல்ல வேண்டும்.. அதாவது, வாரத்தின் 3 நாட்கள் பெண்களும், வார இறுதி நாட்கள் உள்பட 4 நாட்கள் ஆண்களும் பூங்காக்களுக்கு செல்லலாம். திருமணமான தம்பதிகள் ஒரே குடும்பத்தினராக இருந்தாலும் அவர்கள் சேர்ந்து பூங்காவுக்கு செல்லகூடாது.. ஆண் டாக்டர்களிடம் பெண்கள் சிகிச்சைக்கு செல்லக்கூடாது, விமான பயணங்களிலும் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தாலிபான்களின் கண்டிஷன்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

afghanistan taliban living thing television

35 அம்சங்கள்: இதுபோன்ற கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், புதிய புதிய சட்டங்களும் ஆப்கனில் கொண்டுவரப்பட்டுள்ளன.. சமீபத்தில்கூட 35 அம்சங்களை கொண்ட புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.. இதில், இஸ்லாமியர் அல்லாதவர்களுடன் நட்பாக பழகக்கூடாது. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்றெல்லாம் வரையறுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, Sodomy எனப்படும் இயற்கைக்கு மாறான உறவு வைத்து கொள்வதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மனைவியாக இருந்தாலும் கூட, உடலுறவின்போது இயற்கைக்கு மாறாக உறவு கொள்ளக்கூடாது என்பதே இந்த சட்டத்தின் அம்சமாகும்.

afghanistan taliban living thing television

கடும் எதிர்ப்புகள்: நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையிலேயே, இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக காரணங்கள் சொல்லப்பட்டாலும்கூட, இந்த சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் உலக நாடுகளிலிருந்து கிளம்பியிருந்தன.. இந்த புதிய சட்டத்தின் அதிர்வலையே இன்னும் அடங்காத நிலையில், அடுத்த அதிரடியை தாலிபான்கள் கையில் எடுத்துள்ளனர்.

அதாவது, உயிருள்ள எதையும் போட்டோ எடுக்கக்கூடாது, அவைகளை சோஷியல் மீடியாவில் வெளியிடவும் கூடாது என்பதே புதிய தடையுத்தரவாகும். தலிபான் 17வது பிரிவு சட்டத்தின்படி, உயிர் கொண்டு அசையும் எதையும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது தண்டனைக்குரிய செயல் என்று தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த புதிய விதிமுறையை சமூக ஊடகங்களிடம் செயல்படுத்த போவதாக கூறி, இதனை கடைபிடிக்க பத்திரிகையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

சோஷியல் மீடியா: தாலிபன்களின் இந்த உத்தரவுக்கும் வழக்கம்போல் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. உயிருள்ள எதையுமே சோஷியல் மீடியாவில் காட்ட கூடாது என்றால், உயிருள்ள மனிதர்களை காட்டாமல் எப்படி சோஷியல் மீடியா செயல்படும்? என்ற கேள்வி ஊடகவியலாளர்களே முன்வைத்து கொண்டிருக்கிறார்கள்.

போலியோ சொட்டு: இதனிடையே, ஆப்கானிஸ்தானில் நடப்பு மாதத்திற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் இன்னும் சில நாட்களில் ஐ.நா. அமைப்பால் தொடங்கப்பட இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த அந்நாட்டை ஆளும் தலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது.. ஆனால், போலியோ சொட்டு மருத்து முகாம்களுக்கு தடை விதித்ததற்கான காரணம் குறித்து ஆப்கானிஸ்தான் அரசு எந்தவித விளக்கமும் தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டும் போலியோ நோய் தற்போதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போலியோ சொட்டு மருந்து மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட சதி என ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பெரும்பாலானோர் கருதி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+