ஸ்பெயினில் காரை மோதவிட்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு- 2வது தாக்குதல் முறியடிப்பு!!
ஸ்பெயினில் காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
பார்சிலோனா: ஸ்பெயினின் பார்சிலோனாவில் மக்கள் கூட்டத்தில் காரை மோதவிட்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மற்றொரு தாக்குதலை நடத்த முயன்ற தீவிரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா ராம்ப்லாஸ் சுற்றுலா பகுதியில் சாலையை கடந்து சென்ற பாதசாரிகள் கூட்டத்தில் மர்ம நபர்கள் ஓட்டி வந்த வேன் திடீரென பாய்ந்தது. வேனை ஓட்டி வந்த தீவிரவாதி தப்பி ஓடினார். இச்சம்பவத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து காம்ப்ரில்ஸ் என்ற இடத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருதரப்புக்கும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இம்மோதலில் 6 பொதுமக்களும் ஒரு போலீசாரும் படுகாயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்ட 2-வது தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications