For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அய்யோ.. அலறியடித்து ஓடிய ஷாங்காய் மக்கள்.. திடீர்னு வந்த ஷாக் தகவல்.. பரபரப்பு வீடியோ.. என்னாச்சு?

ஷாப்பிங் மாலில் இருந்து ஷாங்காய் மக்கள் அலறியடித்து ஓடிவரும் வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: அலறி அடித்து ஓடும் சீன மக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.. இந்த வீடியோ இணையவாசிகளுக்கு பெரும் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது... அங்குள்ள மீன் மார்க்கெட் ஒன்றில் இந்த தொற்று உருவாகி, உலகமெங்கும் அது பரவியதாகவும் கூறப்பட்டது.

கடந்த 2019- முதல் இப்போது வரை வரலாறு காணாத தாக்கத்தை இந்த வைரஸ் ஏற்படுத்தி விட்டது... நீண்ட காலம் மீண்டு வர முடியாத அளவுக்கு பொருளாதார பாதிப்பையும் ஏற்படுத்திவிட்டது. லட்சக்கணக்கான உயிரையும் காவு வாங்கிவிட்டது...

 ஷாங்காய் நகரில் ஒட்டுமொத்தமாக ராணுவத்தை இறக்கிய சீன அரசு.. குழப்பத்தில் மக்கள்! என்ன காரணம் தெரியுமா ஷாங்காய் நகரில் ஒட்டுமொத்தமாக ராணுவத்தை இறக்கிய சீன அரசு.. குழப்பத்தில் மக்கள்! என்ன காரணம் தெரியுமா

 டாக்டர்கள்

டாக்டர்கள்

இதற்கு மருந்தும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.. இதை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை.. மாறாக பல்வேறு வடிவங்களில் உருமாறி கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறது.. லட்சக்கணக்கான டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும், மருத்துவ வல்லுநர்களும், இந்த கொரோனாவை அழிக்க, அல்லும் பகலும் பாடுபட்டு வருகின்றனர்.. எச்சரிக்கை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தடுப்பூசிகளை கொண்டு, உலக நாடுகள் இன்று மெல்ல மெல்ல படிப்படியாக தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன.

 மீன் மார்க்கெட்

மீன் மார்க்கெட்

ஆனால், தொற்று உருவாகிய அதே சீனாவில் இந்த கொரோனா மீண்டும் பரவி வருகிறது.. கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தும் வருகிறது... தொற்று முதலில் இங்கு உருவாகினாலும், அதை முதலில் களைந்த நாடு சீனாதான்.. உலகத்துக்கே பரப்பிவிட்டு, தான் மட்டும் மீண்டெழுந்து, பொருளாதார ரீதியாகவும் நிமிர்ந்துவிட்டது.. அதேசமயம், இதே சீனாவில் எத்தனையோ பேர் நடுத்தெருவிலேயே கொத்து கொத்தாக சுருண்டு விழுந்தனர்.. குவியல் குவியலாக பிணங்களை எரித்தனர்..

டெஸ்ட்கள்

டெஸ்ட்கள்

இந்த பாதிப்பில் இருந்தும், அதிர்ச்சியில் இருந்தும் மட்டும் சீனா இன்னும் மீளவில்லை.. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் இப்போது அங்கு நடந்துள்ளது. ஷாங்காய் நகரில் 6 வயது சிறுவன் ஒருவன் அங்குள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்று வந்துள்ளான்.. அதற்கு பிறகு அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.. இதையடுத்து, டெஸ்ட் செய்ததில், அவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது... இதை அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த மாலுக்கு சீல் வைக்க சென்று சீல் வைத்தனர்..

 ஜம்ப் - ஓட்டம்

ஜம்ப் - ஓட்டம்

அப்போது ஏராளமான பொதுமக்கள் ஷாப்பிங் மாலில் பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர்.. பின்னர், திடீரென ஒரு அறிவிப்பையும் அதிகாரிகள் அறிவித்தனர்.. வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ சோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்றனர்.. உடனே இதைக் கேட்ட பொதுமக்கள், அங்கிருந்து எகிறி குதித்து வெளியேற தொடங்கினர்.. இவர்கள் ஷாப்பிங் மாலில் இருந்து வெளியே ஓடி வரும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி உள்ளது..

ஜாக்கிரதை

ஜாக்கிரதை

அதில், உயிரை கையில் பிடித்துக்கொண்டு இவர்கள் ஓடுவதை பார்த்தால், ஷாப்பிங் மாலில் ஏதோ தீ விபத்து நடந்து விட்டதுபோல தெரிகிறது.. அந்த அளவுக்கு கொரோனா பீதி சீன மக்களை உலுக்கி எடுத்துவிட்டதாகவே தெரிகிறது.. ஆனால், இந்த வீடியோவை யார் பார்த்தாலும், காரணம் தெரியாமல் முதலில் விழிக்கிறார்கள்.. பிறகுதான் விஷயம் அறிந்து, "அந்த பயம் இருக்கட்டும், பத்திரமாக இருங்கள்" என்று கருத்துக்களை இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.

English summary
big announcement by shangai medical officers and shoppers flee attempt to lock down Ikea Store ஷாப்பிங் மாலில் இருந்து ஷாங்காய் மக்கள் அலறியடித்து ஓடிவரும் வீடியோ வைரலாகிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X