பாத்ரூமில் ஓட்டை.. கிட்ட போய் பார்த்தால்.. அதுக்குன்னு இப்படியா.. ஓனர் செய்த காரியம்.. 3 பேர் பாவம்
: நிறுவனத்தின் கழிவறையில் கேமரா வைத்த முதலாளியை திட்டி தீர்த்து வருகிறார்கள்
பீஜிங்: பாத்ரூமில் கேமிரா வைத்து ஊழியர்களை கண்காணித்துள்ளார் ஒரு முதலாளி.. அவருக்குதான் இணையவாசிகள் டோஸ் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்..!
சபலபேர்வழிகள் நிறைய பேர், பாத்ரூமில் கேமரா வைத்து சிக்கி கொள்வது வழக்கம்.. தனிநபர் கழிவறை என்றாலும்சரி, பொது கழிப்பிடங்கள் என்றாலும் சரி, இந்த சபலிஸ்ட்களுக்கு இடங்கள் முக்கியமில்லை..!
பெண்களை மறைந்திருந்து வீடியோ, போட்டோ எடுத்து, அதை வைத்து அந்த பெண்களுக்கு தொல்லை தருவது, பணம் பறிப்பது போன்ற குற்ற செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.

வாட்ச்சிங்
இதுஒருபக்கம் இருந்தாலும், ஊழியர்களை கண்காணிக்க, அனைத்து நிறுவனங்களிலும் சிசிடிவி கேமராவை பொருத்துவது என்பது நடைமுறையில் இருந்து வரும் வழக்கம்.. ஆனால், கொரோனா உச்சத்தில் இருந்தசமயம், பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்துதான் வேலை பார்த்தார்கள்.. எனவே, இவர்களை கண்காணிக்க முடியாமல் போனாலும், பணிகள் தங்குதடையின்றி அனைத்து துறையிலும் நடந்து கொண்டுதான் இருந்தது.

ஆப்பிள், கூகுள்
இதில், டெலிபர்பாமென்ஸ் என்ற பிபிஓ நிறுவனம் மட்டும் வித்தியாசப்பட்டது.. இந்த நிறுவனம் ஆப்பிள், கூகுள், உபர் போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்குப் பிபிஓ சேவைகளை அளித்து வருகிறது... இந்த நிறுவனத்தில் உலகம் முழுவதிலும் இருக்கும் அலுவலகத்தில் சுமார் 3.8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்... இதில், சுமார் 2.4 லட்சம் ஊழியர்கள் தொற்று காரணமாக கடந்த வருடம் வீட்டில் இருந்து பணியாற்றினார்கள்.. இந்த ஊழியர்களை அவர்கள் வீட்டிலிருந்து AI அதாவது செயற்கை நுண்ணறிவு கேமரா கொண்டு கண்காணிக்கபோவதாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

பாத்ரூம் சிகரெட்
ஆனால், இப்போது வேறு ஒரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.. தென்கிழக்கு சீனாவில் இயங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனம் அது.. அந்த நிறுவனத்தின் பாத்ரூமில் சிசிடிவியை பொருத்தியுள்ளார் அந்த கம்பெனி ஓனர்... அதாவது, அலுவலக இடைவேளையின்போது, தொலைபேசி பயன்பாடு மற்றும் புகைபிடிப்பதை அந்த ஓனர் இப்படி கேமராவை வைத்து கண்காணித்துள்ளார்.. அதில், 3 பேர் சிக்கி உள்ளார்களாம்.. அந்த 3 பேரும், பிரேக் நேரத்தில் பாத்ரூமில் சிகரெட் பிடித்து கொண்டிருந்தார்களாம்.. மேலும் பாத்ரூமில் தங்கள் செல்போனை பயன்படுத்தி விட்டார்களாம். உடனே 3 பேரையும் வேலையில் இருந்து தூக்கி உள்ளார் அந்த முதலாளி.

சிகரெட்
ஆரம்பத்தில், கழிவறையில் கேமரா இருப்பது யாருக்குமே தெரியவில்லை.. போட்டோ வெளியாகி அதற்கு பிறகு உற்றுப்பார்த்தால்தான், கேமரா பொருத்திய விஷயமே தெரியவந்துள்ளது.. அதுமட்டுமல்ல, இவர்கள் சிகரெட் பிடிக்கும் போட்டோவையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டது அந்த நிறுவனம். இதுகுறித்து காரணம் கேட்டதற்கு, நிறுவனத்தின் கொள்கைகளை மீறுவது குறித்து மற்ற ஊழியர்களை எச்சரிக்க நிறுவனம் படங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

கமெண்ட்
எனினும், அந்த ஓனரை இணையவாசிகள் திட்டித்தீர்த்து வருகிறார்கள்.. இப்படி பொதுவெளியில் போட்டோவை வெளியிடுவது பிரைவைசியை பாதிப்பதாகும் என்றும், சீனாவில் "பிக் பிரதர்" கண்காணிப்புக்கு இன்னொரு உதாரணம் என்றும் கமெண்ட்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். கண்காணிப்பு கேமராக்களை தவறாக பயன்படுத்தியதற்காக இந்த நிறுவனத்தை தண்டிக்க வேண்டும் என்றும், மனிதர்களுக்கு கொஞ்சமும் மரியாதை தராமல், மனிதநேயமும் இல்லாமல் விலங்குகளைப் போல நடத்துகிறார்கள் என்றும் அந்த முதலாளிக்கு எதிராக வசவுகள் பதிவாகி கொண்டிருக்கின்றன..
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications