"ஆபத்து".. எல்லாரும் அழிய போறாங்க.. 3ம் உலகபோர் வரும்.. காரணமே இந்த நாடுதான்.. பெண் சாமியார் கணிப்பு
3ம் உலகப்போர் விரைவில் நடக்கும் என்று கியூப பெண் ஜோதிடர் கணித்துள்ளார்
ஹவானா: 3ம் உலகப்போர் விரைவில் நடக்க போவதாக, கியூப ஜோதிட பெண் ஒருவர் கணித்து சொன்ன தகவல், இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பாபா வங்கா பல்கேரியாவை சேர்ந்தவர்.. கண்பார்வையற்றவரும் கூட.. 85ம் வயதில் 1996-ம் வருடம் இறந்துவிட்டார்.. பல்கேரிய நாஸ்டர்டாமாக இவர் இப்போதுவரை மதிக்கப்படுகிறார்.
12 வயதில் பார்வையை இழந்தவுடனேயே உலகில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகளை கணித்து சொல்ல துவங்கிவிட்டார்.

நிஜங்கள் + கணிப்புகள்
கடந்த 50 வருடங்களில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து சொன்னவர்.. இவர் சொன்னதில் 85 சதவீதத்துக்கும் பலித்தும் உள்ளது.. அவைகளில் பல ஒவ்வொரு கால கட்டத்திலும் நடந்தும் வருகின்றன. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல், அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர்தான் பதவியேற்பார், 2016-ல் ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் வலிமை பெறும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும், குடிமக்கள் மீது சிரியா ஜனாதிபதி ரசாயன தாக்குதலை நடத்துவார், உலகில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும், என பல விஷயங்களை கணித்து சொன்னார்.

லிஸ்ட் போட்ட பாபா வாங்கா
இவர் கணித்து விட்டு போன அத்தனையும் நடந்தது.. அதிகப்படியான டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையே குழப்பம் ஏற்படும் என்பது முதல், இந்த 2022ல் ஆஸ்திரேலியாவில், சீனாவின் தென் மாகாணங்களில் வெள்ளம் ஏற்படும் என்று கணித்து கூறியதும் பலித்துவிட்டது.. எனவே, ஒவ்வொரு வருடமும் பாபா வாங்கா சொல்லிய கணிப்புகள் மிகுந்த கவனத்துடன் கவனிக்கப்படும்.

ஷாக்கடிக்கும் செய்தி
அந்தவகையில், இன்னொரு பெண் ஜோதிடர் தற்காலத்தில் பகீரை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.. இவர் கியூபாவை சேர்ந்தவர்.. அவர் பெயர் மோனி விடன்ட்டே.. இந்த பெண்மணி கணித்து சொன்னதும் பலமுறை நடந்துள்ளது.. அந்தவகையில், இப்போது, மூன்றாம் உலகப்போர் பற்றி தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார்... மூன்றாம் உலகப்போர் கண்டிப்பாக நடக்க போகிறதாம்.. 9 வருடங்களுக்கு இந்த போர் நீடிக்கும் என்றும், அதற்கு முக்கிய காரணமாக சீனாதான் இருக்கும் என்றும் உறுதியாக சொல்கிறார்.

வேர்ல்டு வார்
3ம் உலகப்போர் குறித்த பேச்சு, பல வருடங்களாகவே நடந்து வருகின்றன.. சில நாடுகளில் அதிருப்திகள் வெடித்து வந்த நிலையில், அவைகளுக்குள் போரையும் துவங்கிவிட்டன.. இப்படிப்பட்ட சூழலில், இந்த பெண் 3ம் உலகப்போர் குறித்து அறுதியிட்டு சொல்லி உள்ளதால், அது கலக்கத்தை தந்து வருகிறது.. ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும்நிலையில், இந்த நாடுகளுக்குள் போர் தொடர்ச்சியாக நடக்கும், இதனால் ஆபத்து என்றும் மோனி சொல்கிறார்..
Recommended Video

ஏவுகணைகள்
அதுமட்டுமல்ல, அமெரிக்காவுடன் நெருக்கமாக மற்றும் உலகத்தில் முன்னணி நாடாக இருக்கும் தென்கொரியா ஜப்பான், வியட்நாம், வடகொரியாவையும் தன்னோடு இணைத்துக் கொள்ள நினைக்கிறது என்று கூறியுள்ளார்... சீனா அமெரிக்காவை வீழ்த்தி வல்லரசாக மாறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லும், அதன்காரணமாகவே உலகப் போரை தூண்டிவிடும்.. இந்த உலகப்போரில், குண்டுகளும், ஏவுகணைகளும் வந்துவிழும், உலகின் ஒவ்வொரு மனிதரும் அழியப் போகிறார்கள்" என்றும் கூறி மோனி உலக நாடுகளை கலங்கடித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications