"டச்" பண்ணிட்டாராம் மனைவியை.. "நோ தாம்பத்யம்".. கோர்ட்டே சொல்லிடுச்சு.. அப்படியே உறைந்து நின்ற கணவர்
மனைவியை தாக்கிய கணவனுக்கு நீதிமன்றம் அளித்த தண்டனையானது பேசுபொருளாகி உள்ளது
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில், குற்ற செயல் ஒன்றுக்கு தண்டனை தரப்பட்டுள்ளது.. அந்த குற்றத்தைவிட, அந்த தண்டனை சமாச்சாரம்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.
ஸ்பெயினின் வடக்கு நகரமாக விளங்கி வருகிறது சொரியா.. இங்கு ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள்.. இவர்கள் 2 பேருமே சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்து வருபவர்கள்.
அதிலும் டிக்டாக் வீடியோக்களை நிறைய வெளியிட்டு வருபவர்கள்.. இதனால், இவர்களுக்கு தனித்தனியாக நிறைய ரசிகர் கூட்டமும், ஏகப்பட்ட ஃபாலோயர்ஸ்களும் உண்டு.

காரசாரம்
ஒருநாள், 2 பேரும் சேர்ந்து டிக்டாக் வீடியோ லைவ் ஸ்ட்ரீம் ரிக்கார்ட் செய்து கொண்டிருந்தார்கள்.. அப்போது 2 பேருக்கும் திடீரென சண்டை வந்துவிட்டது.. காரசாரமான வாக்குவாதம் வெடித்தது.. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவன், மனைவியை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார்.. இவ்வளவும் லைவ் வீடியோவிலேயே ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து டிக்டாக் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்தனர்... உடனடியாக, அந்த வீடியோவினை அப்படியே போலீசுக்கு அனுப்பி வைத்துவிட்டனர்..

லைவ் ஸ்ட்ரீம்
எப்போதுமே ஸ்பெயின் நாட்டை பொறுத்தவரை, வன்முறைகளுக்கு மிகப்பெரிய தண்டனைகளை தருவார்கள்.. அதிலும், குடும்ப வன்முறைக்கு எதிராக கடுமையான சட்டங்களே அங்கு உண்டு... பாலின சமத்துவத்தை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.. குடும்ப வன்முறை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களும் அங்கே செயல்படுகின்றன... உதாரணமாக, மனைவிக்கு பொருளாதார வசதி இல்லை என்றாலும், கோர்ட்டுக்கே சென்று அதனை முறையிடலாம்..

பழுத்த கன்னம்
இதற்காக நீதிமன்றமே இலவசமாக வழக்கறிஞரை நியமித்து உதவியை நாட செய்யும்.. இதைதவிர, குடும்ப வன்முறை புகார்களை தெரிவிக்க ஹாட்லைன் வசதியும் உண்டு. இப்போது விஷயம் என்னவென்றால், மனைவி கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டாரே கோபக்கார கணவர்.. அந்த கேஸ் கோர்ட்டு வரை சென்றுவிட்டது.. ஆனால், அடிகொடுத்த கணவனோ, அறைவாங்கிய மனைவியோ, இதை பற்றி எந்த புகாரும் யார்கிட்டயும் தரவேயில்லை.. அந்த வீடியோவை பார்த்த பொதுமக்களே, போலீஸ், கோர்ட் வரை விவகாரத்தை கொண்டுசென்றுவிட்டனர்.. வீடியோ பதிவும் ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது..

பாருங்க பாருங்க
உடனே நீதிமன்றமும் இந்த வழக்கை தானாகவே முன்வந்து விசாரிக்க ஆரம்பித்தது.. அப்போதுகூட மனைவி எந்த புகாரையும் கணவன்மீது சொல்லவேயில்லை.. வழக்கு விசாரணையின்போது நீதிபதி கேட்டும்கூட, கணவருக்கு எதிராக மனைவி குற்றம்சாட்ட மறுத்து விட்டார்... அப்போதுகூட கோர்ட் விடவில்லையே.. வழக்கை தீவிரமாக விசாரித்தது.. அதுவும் ஒரு மாத காலத்துக்கு, இந்த வழக்கு விசாரணை நடந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. இறுதியில் கணவருக்கான தண்டனையையும் உறுதி செய்யப்பட்டது.

தள்ளி தள்ளி போகாதே
கன்னத்தில் மனைவியை அறைந்த கணவருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.. அதுமட்டுமல்ல, 3 வருடங்களுக்கு மனைவியை எந்த வகையிலும் தொடக்கூடாது, தொடர்புகொள்ளவும் முயற்சிக்க கூடாது என்றும் உத்தரவு போடப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, அடுத்த 3 வருடங்களுக்கு மனைவி எந்த இடத்தில் இருந்தாலும், 1000 அடி தள்ளியே கணவன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது... ஸ்பெயின் மக்களிடையே இந்த தீர்ப்புக்கு வரவேற்பும் எழுந்துள்ளது என்றாலும், கன்னத்தில் ஒரே ஒரு அறை தந்துவிட்டு, இப்போது நொந்து போயுள்ளாராம் அந்த கணவர்.. என்னத்த சொல்றது போங்க!!












Click it and Unblock the Notifications