"மரண அடி".. இதான் கரெக்ட்டான டைம்.. இதுக்கும் தடையா?.. தாலிபன்களின் ஓவர் அட்டகாசம்.. எகிறிய ஐ.நா.
ஆப்கனில், பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருவதை, ஐநா மீண்டும் கண்டித்துள்ளது
காபூல்: ஆப்கனில் பெண்கள் கல்வி பயில தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.. அந்தவகையில், மீண்டும் தன் வலிய கண்டனத்தை பதிவு செய்துள்ளது ஐநா..!!
தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் கிட்டத்தட்ட 2 வருடங்களாகவே பெண் குழந்தைகள், ஸ்கூலுக்கு போகாமல் இருக்கிறார்கள்.
மேலும், ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் ஆடை கட்டுப்பாடு, பொழுதுபோக்கு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் செல்ல தடை என பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதழியல்
தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 4 மாதத்துக்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் நடந்த பல்கலைக்கழக நுழைவுத்தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவிகள் நுழைவுத்தேர்வு எழுதினார்கள்.. ஆனால், நுழைவுத்தேர்வின் முடிவுகள் வெளியான சமயத்தில், பொருளாதாரம், பொறியியல், இதழியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் படிப்பதற்கு தடையை அறிவித்துவிட்டது தாலிபன் அரசு.

டாக்டர்கள்
இதனால் அப்பெண்கள், ஆவேசமடைந்து, போராட்டத்திலும் ஈடுபட்டனர்.. ஆனால், அப்போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன.. பல்கலை கல்வி குறித்து அறிவிப்பில் எந்தவொரு இறுதி முடிவும், இன்னமும் எட்டப்படாத நிலையில், பெண்கள் தங்கள் சிகிச்சைக்காக, ஆண் டாக்டரை அணுகக்கூடாது என்று அடுத்த உத்தரவை பிறப்பித்தது தாலிபன் அரசு.. பெண்களுக்கு கல்வி கற்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதால் பெண் டாக்டர்களும் அங்கு உருவாகாத சூழல் நிலவி வருகிறது. மேலும், பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்றும் தாலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்தும் விட்டனர்..

துணிக்கடை பொம்மை
கடந்த வாரம்கூட ஒரு அறிவிப்பு வெளியானது.. அங்குள்ள துணிக்கடைகளில் பார்வைக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகளில், முகத்தை மறைத்துதான் காட்சிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்களாம்.. அங்குள்ள பொம்மைகள் அனைத்தும் முகத்தை மறைத்தே காட்சியளித்து கொண்டிருக்கின்றன... அதாவது, அங்கு 6-ம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்க முடியாத நிலை உள்ள நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டதையடுத்து, கடுமையான எதிர்ப்புகள் வெடித்து கிளம்பி உள்ளன..

80 சிறுமிகள்
ஐக்கிய நாட்டு சபையும் இந்த தடையை நீக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. 4 நாட்களுக்கு முன்புகூட, சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக, யுனெஸ்கோ தன்னுடைய ஆராய்ச்சியில் தெரிவித்திருந்தது.. 80 சதவீத குழந்தைகள் என்றால் வருங்காலத்தில் ஒரு புதிய தலைமுறை கல்வி கற்காத ஒரு சூழ்நிலையில் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் அது கூறியிருந்தது.. இதுகுறித்து, ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மிகுந்த வேதனையை பதிவு செய்திருந்தார்.

டைம் இதுதான்
கல்வி பயில கொடுமைப்படுத்தும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது... குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்ப பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி நாளின் கருப்பொருள், கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள் என்பதே ஆகும் என்று ஆதங்கத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார். இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிபிட்ஸ், ஐநா துணை பொதுச்செயலாளர் அமீனா முகமது ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆப்கானிஸ்தான் சென்று பெண்களுக்கு எதிரான செயல்கள் பற்றி விசாரணை நடத்தினார்கள்.

மரண அடி
அப்போது மனிதாபிமான நடவடிக்கைகளில் பெண்களின் செயல்பாட்டை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு வருவதாக தலிபான்கள் தரப்பில் ஐநா குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.. இதையடுத்து, அந்நாட்டில் மறுபடியும் பெண்கள், சிறுமிகள் படிக்க வாய்ப்பு உருவாகும் என்று பெரிதும் கருதப்பட்டது. ஆனால் தலிபான்களோ, பெண் உதவி பணியாளர்களுக்கும் தடையை விதித்துவிட்டனர்.. இது பல முக்கியமான மனிதாபிமான திட்டங்களுக்கு மரண அடி என்று ஐக்கிய நாடுகள் சபையில் மனிதாபிமான பிரிவு தலைவர் மார்ட்டின் கிரிபித்ஸ் கூறியுள்ளதுடன், தலிபான்கள் இந்த கட்டளைக்கு விதிவிலக்கு அளிக்காவிட்டால், இதுபேரழிவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications