ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டம்: அமெரிக்கா மாகாணங்களிடையே மோதலால் பரபரப்பு!!
நியூயார்க்: அமெரிக்காவின் இண்டியானா, அர்கான்சஸ் மாகாணங்களில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஓரினசேர்க்கையாளர்களும் இந்த சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கடந்த வாரம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் ஓரின சேர்க்கையாளர்களுக்கு தொழில் நிறுவனங்கள் சேவைகள் செய்ய தடை விதிக்கப்படுகிறது.
அதாவது உணவகங்கள், தங்குமிடங்களில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு இம்மாகாணங்களில் அனுமதி மறுக்கப்படும். இதற்கு சில நிறுவனங்களும் ஓரினச்சேர்க்கையாளர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் இண்டியானாவை பின்பற்றி அர்கான்சஸ் மாகாணத்தில் நேற்று இதே போன்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு நியூயார்க், வாசிங்டன் உள்ளிட்ட மாகாணங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும் இண்டியானா, அர்கான்சஸ் மாகாணங்களுக்கு அவசியமற்ற அரசு முறை பயணங்களை மேற்கொள்ளவும் இந்த மாகாணங்கள் தடை விதித்துள்ளன. இரு மாகாணங்களின் மேயர்களும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வேறு சில மாகாணங்களும் இண்டியானா, அர்கான்சஸ் மாகாணங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications