பாகிஸ்தானுக்கு 2 பக்கமும் அடி.. தனி நாடாகும் பலுசிஸ்தான்? தலைநகரை கைப்பற்றிய போராளி குழு

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மோதி வரும் பாகிஸ்தான் தற்போது அதன் மிகப்பெரிய மாகாணமான பலூசிஸ்தானை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. அதாவது பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் பலூச் விடுதலை ராணுவம் என்ற போராளி நேற்றைய தினம் பாகிஸ்தான் ராணுவத்தை கடுமையாக தாக்கி அந்த மாகாணத்தின் தலைநகர் குவாட்டா மற்றும் முக்கிய ராணுவ நிலைகளை கைப்பற்றி உள்ள பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பாகிஸ்தானில் இருந்து உடைந்து பலுசிஸ்தான் தனிநாடாகிறதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தனது கிழக்கு பகுதியில் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. அதேபோல் மேற்கு பகுதியில் பலூச் விடுதலை ராணுவத்துடன் மோதி வருகிறது. மத்தளத்துக்கு 2 பக்கம் அடி விழும் என்பது போல் இந்திய ராணுவம் ஒருபுறமும், இன்னொரு புறம் பலூச் விடுதலை ராணுவமும் (Baloch Liberation Army), பாகிஸ்தான் ராணுவத்துக்கு சம்மட்டி அடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தான் இந்தியாவை போல் பாகிஸ்தான் ராணுவத்தை அடித்து விரட்டி பலூச் விடுதலை ராணுவம் வேகமாக முன்னேறி வருகிறது. பலூச் விடுதலை ராணுவம் என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமாக உள்ள பலுசிஸ்தானில் செயல்பட்டு வருகிறது.

பலுசிஸ்தான் என்பது கனிமவளம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் பாகிஸ்தான் அரசு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவது இல்லை. இதனால் மக்கள் பசி, பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர். அதேவேளையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த கனிமவளங்களை வெட்டி எடுத்து சீனாவுக்கு, பாகிஸ்தான் அனுப்பி வருகிறது. இதனை பலுசிஸ்தான் மக்கள் விரும்பவில்லை. இதனால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக பலுசிஸ்தானில் போராளி குழுக்கள் உருவாகி செயல்பட்டு வருகிறது.

இவர்கள் பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணத்தை தனியாக பிரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகின்றனர். அடிக்கடி பாகிஸ்தான் ராணுவத்துக்கும், பலூச் விடுதலை ராணுவத்துக்கு மோதல் என்பது ஏற்படும். அதில் முக்கியமான அமைப்பு என்பது பிஎல்ஏ எனும் பலூச் விடுதலை ராணுவம். இப்போதும் பலூச் விடுதலை ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே மோதல் என்பது ஏற்பட்டு வருகிறது.

பலூச் விடுதலை ராணுவம் பலுசிஸ்தானில் உள்ள சில முக்கிய ராணுவ நிலைகளை கைப்பற்றி உள்ளது. மேலும் பலுசிஸ்தான் தலைநகராக உள்ள குவாட்டாவை கைப்பற்றி உள்ளது. இதுபற்றி பலூச் விடுதலை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஜியாந்த் பலூச் கூறுகையில், ‛‛பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக எங்களின் படை மொத்தம் 6 இடங்களில் தாக்குலை தொடங்கியது. கெச், மாஸ்டூங், காச்சி மாவட்டங்களில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஐஇடி வெடிகுண்டுகள் வெடிக்க செய்யப்பட்டது. லாஞ்சர்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதல் என்பது பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டது'' என்றார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து குவாட்டாவில் உள்ள ஃப்ரண்டையர் கார்ப்ஸ் தலைமையகம் இப்போது எங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதேபோல் மேலும் சில ராணுவ நிலைகளை கைப்பற்றி உள்ளது பலூச் விடுதலை ராணுவம். மேலும் பலூச் விடுதலை ராணுவம், ஹசாரா டவுன், கிராின ரோடு உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளது. காட்கன் மற்றும் ஷா திம் உள்ளிட்ட இடுங்களில் ஐஇடி வகை வெடிகுண்டுகளை போட்டும், கையெறி குண்டுகளை வீசி அட்டாக் செய்துள்ளது.

இதன்மூலம் பலூசிஸ்தானின் மொத்த கட்டுப்பாடும் விரைவில் பலூச் விடுதலை ராணுவம் வசம் விரைவில் செல்லலாம் என்று சொல்லப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் ராணுவம் பலூசிஸ்தானை இழக்கும் அதேவேளையில் பலூச் விடுதலை ராணுவம் சார்பில் தங்களை தனி நாடாக அங்கீகரிக்கும்படி ஐநாவுக்கு கோரிக்கை என்பது இன்னும் அழுத்தமாக வைக்கப்படும். ஒருபுறம் இந்தியா, இன்னொரு புறம் பலூச் விடுதலை ராணுவம் என்ற போராளி குழு உள்ளிட்டவற்றால் பாகிஸ்தான் அடிமேல் அடி வாங்கி வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+