லண்டன் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு- பலர் படுகாயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லண்டன்: மேற்கு லண்டனில் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

லண்டன் நேரப்படி இன்று காலை 8.20 மணியளவில் பார்சன்ஸ் கிரீன் சுரங்க ரயில் நிலையத்தில் பயங்கர சப்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு ரயிலில் இருந்து வெளியேறினர்.

Blast reported on London Metro train

பயணிகள் பலரது முகங்களிலும் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர்.

ரயில் முழுவதும் போலீசார் சோதனை செய்ததில் மற்றொரு வெடிக்காத வெடி குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Several people injured as explosion on Metro train in west London.
Please Wait while comments are loading...