கழுத்தை நெரிக்கும் நெருக்கடி! பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கை இப்படிதான் நகர்கிறது.. நேரடி ரிப்போர்ட்
இவ்வளவு பொருளாதார நெருக்கடியிலும் பாகிஸ்தான் பணக்காரர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஐஎம்எஃப் கடன் நிபந்தனைக்கு அந்நாட்டு அரசு நேற்று ஒப்புதல் தெரிவித்துள்ளது. இருப்பினும் இக்கடன் உடனடியாக கிடைக்காது. இப்படி இருக்கையில் பாகிஸ்தான் மக்கள் இந்த நெருக்கடியில் எவ்வாறு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என்று 'ப்ளூம்பெர்க்' நேரடி ஆய்வினை மேற்கொண்டு சில விஷயங்களை பொதுவெளிக்கு கொண்டுவந்திருக்கிறது.
பாகிஸ்தான் சுதந்திரமடைந்து ஏறத்தாழ 76 ஆண்டுகள் ஆன நிலையில், அதனுடைய வளர்ச்சியானது கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடைசி 48 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது. ஒன்றிரண்டு மாதத்திற்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் அளவுக்கு அந்நிய செலாவணி கையிருப்பில் இருக்கும் நிலையில் சர்வதேச நாணய நிதியமும் கடனை வழங்க தாமதப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் ஏற்கெனவே இருந்த பொருளாதார நெருக்கடியை திவால் நிலையை நோக்கி வேகமாக நகர்த்தியுள்ளது. எரிபொருள், கோதுமை, டீ, மின்சாரம் என வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைகள் அனைத்தும் போதுமான அளவு இருப்பு இல்லாததால் மக்கள் கோபமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் எதிர்க்கட்சியினர் மக்களை திரட்டி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வாழ்வாதாரம்
இதெல்லாம் போதாது என தீவிரவாத தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. சமீபத்தில் பெஷாவர் நகரில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் ப்ளூம்பெர்க் நடத்தியுள்ள ஆய்வில் உள்ளூர் மக்கள் தங்கள் சூழலை விளக்கியுள்ளனர். பரபரப்பாக இயங்கும் துறைமுக நகரமான கராச்சியில் மீன் உள்ளிட்ட கடல் உணவு பொருட்கள் விற்பனை பாதியாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். மீன் வியாபாரி முஹம்மது ரஷித் இது குறித்து கூறுகையில், "வழக்கமாக நடுத்தர மக்கள்தான் அதிக அளவில் மீன் வாங்குவார்கள். தனித்தனியாக அவர்கள் வாங்கும் அளவு குறைவாக இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் கூட்டம் வரும்.

உணவு பொருள்
ஆனால் இந்த முறை இந்த மக்கள் கூட்டத்தை பார்க்க முடியவில்லை. ஆனால் பணக்காரர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு எந்த பிரச்னையும் இருப்பதில்லை. இவர்கள் வாங்குவது குறைவான அளவாக தான் இருக்கும் எனவே வருமானம் பாதிதான் வந்திருக்கிறது" எனக் கூறியுள்ளார். அதேபோல பெட்ரோல் பங்க் மேனேஜர் இர்பான் அலி கூறுகையில், "கராச்சியில் இருக்கும் இந்த பெட்ரோல் பங்க் மிக முக்கியமானது. இந்நகரமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். எனவே எங்களுக்கு வியாபாரத்தில் கவலையில்லாமல் இருந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு வியாபாரத்தை பாதித்திருக்கிறது.

எரிபொருள்
பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.200 (பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில்) ஆக இருந்தபோது ஒரு நாளைக்கு சுமார் 15 ஆயிரம் லிட்டர் விற்பனையானது. ஆனால் இன்று லிட்டர் ரூ.250ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் விற்பனை 2 ஆயிரம் லிட்டர் குறைந்து 13 ஆயிரமாக சரிந்திருக்கிறது. மக்கள் தங்கள் தேவையற்ற பயணத்தை குறைத்துக்கொண்டனர்" என்று கூறியுள்ளார். மேலும், "வியாபாரம் குறைந்தாலும் நாங்கள் எங்கள் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்பவில்லை. ஆனால் இதே நிலைமை நீடித்தாலோ, நிலைமை இதைவிட மோசமடைந்தாலோ வேலையின்மை அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்.

பெண்கள்
வெளியில் நிலைமை இப்படி இருக்க வீட்டில் பெண்களின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது. வீட்டுவேலை செய்து குடும்பத்தை நடத்தும் ஃபர்சானா கூறுகையில், "முன்னாடி மாதிரி எதுவும் இல்ல. எல்லாம் டபுள் மடங்கா மாறிடுச்சு. கரண்டு பில், கேஸ் பில் டபுள் ஆயிடுச்சு. செலவுக்கு நான் வேலை செய்யும் வீட்டுல ரூ.5 ஆயிரம் வரைக்கும் கடன் வாங்கியிருக்கேன். ஆனா அதுவும் பத்தல. இதனால 16 வயதான என்னுடைய மகன் ஓட்டலுக்கு வேலைக்கு போறான். இப்போ ஸ்கூலுக்கு போயிட்டேதான் வேலைக்கு போறான். ஆனால் நிலைமை மோசமாயிடுச்சினா அவன நிரந்தரமா வேலைக்கு அனுப்புற மாதிரி ஆயிடும்" என்று கூறியுள்ளார்.

விவசாயிகள்
இதேபோல சிறு குரு பண்ணை விவசாயிகள் கூட மின்சாரம் மற்றும் கேஸ் விலை ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஏக்கர் வைத்து வேளாண் தொழில் செய்து வரும் முகமது ரஷீத் கடந்த சில மாதங்களாக குறைவான லாபம் வந்திருந்ததாகவும், தற்போது நஷ்டமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். பண்ணை விவசாயிகளுக்கே இந்நிலைமை எனில் கூலி விவசாயிகளின் நிலை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது என்கிறது ப்ளூம்பெர்க் ஆய்வுகள்.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications