முடிச்சிவிட்டீங்க போங்க.. வரி விவகாரத்தில் முதல் பலியான போயிங்! சீனாவிலிருந்து மொத்தமாக காலி செய்தது
பெய்ஜிங்: வரி விஷயத்தில் அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் முட்டல் மோதல்கள் நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த பஞ்சாயத்தில் போயிங் நிறுவனம் முதல் பலியாக மாறியிருக்கிறது.
சீனாவுக்காக உருவாக்கப்பட்ட போயிங் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பி சென்றிருக்கிறது. இதனால் அந்நிறுவனம் நஷ்டமடைய தொடங்கியிருக்கிறது.

போயிங் 737 மேக்ஸ் வகையை சேர்ந்த இந்த விமானம் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உற்பத்தி செய்யப்பட்டது. அங்கிருந்து சீனாவின் ஜோஷன் நகருக்கு கொண்டுவரப்பட்டது. இங்கு வைத்து பெயிண்டிங் உள்ளிட்ட வேலைகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. வேலைகளை முடித்து ஜியாமென் ஏர்லைன்ஸ் எனும் சீன விமான நிறுவனத்திற்கு இந்த விமானத்தை கைமாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வரி விவகாரத்தில் அமெரிக்க தயாரிப்பு பொருட்களுக்கு சீனா கூடுதல் வரியை போட்டதால் இந்த விமானத்தை வாங்குவது அந்நிறுவனத்திற்கு நஷ்டத்தைதான் ஏற்படுத்தும்.
எனவே, நிறுவனம் விமானத்தை வாங்கும் திட்டத்தை கைவிட்டது. ஆகவே விமானம் மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பிவிடப்பட்டது. இது போயிங் நிறுவனத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும்.
ஏற்கெனவே கோவிட் 19 மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக போயிங் தயாரிப்புகளை சீனா குறைத்து வந்தது. இப்போது வரி காரணமாக மொத்தமாக போயிங் உடனான ஒப்பந்தத்தை சீன நிறுவனம் நிறுத்திக்கொண்டிருக்கிறது.
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து, சீனாதான் உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமான சந்தையை கொண்டிருக்கிறது. 2035ம் ஆண்டுக்குள் சீன விமான சந்தையில் முதலிடத்தை பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் சீனாவுக்கு 8,560 விமானங்கள் புதியதாக தேவைப்படுகிறது என போயிங் ஒரு ஆய்வில் தெரிவித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தனது தயாரிப்புகளில் 25 சதவிகிதத்தை சீனாவுக்கே போயிங் அனுப்பியிருக்கிறது. 25% என்பது மிகப்பெரிய சந்தை மதிப்பு.
இப்போது இந்த சந்தையை போயிங் நிறுவனம் முழுமையாக இழக்க தொடங்கியிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், சீனாவுக்காக செய்யப்பட்ட விமானம் மீண்டும் அமெரிக்காவுக்கே திருப்பி அனுப்பியிருக்கும் நிகழ்வு. சீன தயாரிப்புகளுக்கு மாற்றாக, உள்ளூர் தயாரிப்புகளை அதிகரிக்க சீனா முயன்று வருகிறது. குறிப்பாக COMAC C919 போன்ற சீன விமானங்களின் தயாரிப்பை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது ஏர்பஸ் மற்றும் போயிங் ரக விமானங்களுக்கு மாற்றாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இது வெறும் தொடக்கம்தான். விமானத்துறையிலேயே இவ்வளவு பஞ்சாயத்துகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் ஏராளமான துறைகள் இருக்கின்றன. அதில் எந்தெந்த நிறுவனங்கள் மண்ணை கவ்வியிருக்கின்றன என்பது போக போக தெரிந்துவிடும்.
வரி விஷயத்தை பொறுத்தவரை யாரும் வெற்றி, தோல்வி அடைய முடியாது. இரு நாடுகளும் இதனால் கடுமையான பாதிப்புகளை மட்டுமே எதிர்கொள்ளும். இது வெறும் நம்பர் கேம் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவால் ஆடிப்போன சீனா... அமெரிக்காவுடன் இணைந்து மாஸ்டர் மூவ்.. உற்று பார்க்கும் உலக நாடுகள் -
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
இந்தியாவை முடக்க சீனாவின் நரித்தனம்.. பக்காவான பிளான் Bஐ இறக்கும் இந்தியா.. பிரம்மாண்ட அஸ்திரம்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே!












Click it and Unblock the Notifications