தாய்லாந்தில் பள்ளியில் குண்டு வெடித்ததில் தந்தை, மகள் பலி
பாங்காக்: தாய்லாந்தில் பள்ளியில் குண்டு வெடித்ததில் தந்தை, மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்தில் புத்த மதத்தை சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இருந்த போதிலும் யாலா, நாராதிவாத், பட்டாணி,ஹுவா ஹின், புக்கெட், சுராட் தானி ஆகிய 3 மாகாணங்களில் பிற மதத்தினர் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.

பிற மதத்தினர் பெரும்பான்மையாக வாழும் இந்த மாகாணங்களில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களின் இந்த சண்டையில் இதுவரை சுமார் 6 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அரசு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் இந்த மாகாணங்களில் எப்பொழுதும் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நாராதிவாத் மாகாணத்தில் தாய்லந்து-மலேசிய எல்லை நகரான டாக் பாயில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கு உள்ள ஒரு தொடக்க பள்ளியின் நுழைவு வாயிலில் வெடிகுண்டுகள் பொருத்திய மோட்டார் சைக்கிளை பயங்கரவாதிகள் நிறுத்தி வைத்திருந்தனர். ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை பள்ளியில் கொண்டு வந்து விடுவதற்காக அங்கு வந்திருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் தனது குழந்தையை பள்ளியில் விடுவதற்காக வந்திருந்த ஒருவரும், அவரது 5 வயது மகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications