நாளை பொதுத்தேர்தல்.. இன்று பயங்கர குண்டு வெடிப்பு.. 25 பேர் பலி! பாகிஸ்தானில் பதற்றம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இன்று இரண்டு இடங்களில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் முதல் குண்டு வெடித்திருக்கிறது. இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது.

அதேபோல, இந்த பகுதியிலிருந்து சுமார் 150 கிமீ தொலைவில் உள்ள கில்லா சைஃப் உல்லா மாவட்டத்தில் இரண்டாவது குண்டு வெடித்திருக்கிறது. இதில் 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை. குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக தேர்தல் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர். குண்டு வெடிப்பு நடந்தாலும் தேர்தல் உறுதியாக நடத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு உறுதியாக கூறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications