தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பயங்கர குண்டுவெடிப்பு... 12 பேர் உடல் சிதறி பலி
பாங்காக் : இந்து ஆலயம் இருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வெடிக்காத குண்டு ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.
சிட்லாங்க மாவட்டம் ரட்சாபிரசாங் என்ற பகுதியில் பிரம்மாண்ட வணிகவளாகம் ஒன்று உள்ளது. அதன் அருகில் பிரம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகள் வருவது வழக்கம்.

இந்நிலையில், இன்று மாலை (திங்கட்கிழமை) வணிக வளாகம் அருகே குண்டு ஒன்று பங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் ஆலயத்திற்கு வந்தவர்கள் உள்பட 12 பேர் உடல் சிதறி பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கரவாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக பாங்காக் போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தாய்லாந்தில் குண்டு வெடிப்பு என்பது மிகவும் அரிதாகவே நிகழும். கடந்த ஆண்டு மே மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அவ்வப்போது மோதல்கள், கலவரங்கள் மட்டும் வெடிக்கும்.
இந்நிலையில், தற்போது நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தாய்லாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications