துபாயில் ப.சிதம்பரம் ஒரு பார்வை நூல் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

துபாய்: மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் பல்வேறு சாதனைகளை விளக்கி கவிஞர் இலக்கியா நடராஜன் தொகுத்தளித்துள்ள " ப.சிதம்பரம் - ஒரு பார்வை" என்ற நூல் வெளியீட்டு விழா, ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் செப்டம்பர் 20 ஆம் தேதி நடைபெறுகிறது.

மாலை 6.00 மணியளவில் துபாய் அல் கிஸஸ் பெண்கள் உயர் நுட்பக் கல்லூரியில் நடைபெறுகின்றது.

Book on Minister P Chidambaram to be released in Dubai

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம், அமீரகத்திற்கான இந்திய தூதர் லோகேஷ், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். அழகிரி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், தட்ஸ்தமிழ் ஆசிரியர் ஏ.கே.கான், இந்தியா மற்றும் அமீரகத்திலிருந்து பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் விழாவில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

நூல் வெளியீட்டு விழாவில் இசை அமைப்பாளர் யு.கே. முரளி, பிரபல பின்னணி பாடகி மஹதி, பின்னணி பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா மற்றும் பல பிரபல பாடகர்கள் பங்கு பெறும் பிரம்மாண்டமான இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

நவீன இந்தியாவின் பொருளாதார சிற்பியாகவும், தலை சிறந்த நிதியமைச்சராகவும் விளங்கும் ஒரு தமிழரின் சிறப்புகளைப் பரப்பும் அழகிய நூலை அமீரகத்தின் அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்று கூடி, துபாயில் வெளியிடுவது இது தான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவிற்கான ஏற்பாடுகளை அரிகேசவநல்லூர் மீரான், எமிடா அமுதரசன் தலைமையில் எமிடா ஈவெண்ட்ஸ் விழாக் குழுவினர் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

விழாவிற்கான அனுமதி இலவசம் மற்றும் நுழைவு சீட்டுகளை 0529962621/0529960702 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+