யு.எஸ்.: நாய்க்குட்டியை தர மறுத்த 8 வயது சிறுமியை சுட்டுக் கொன்ற 11 வயது சிறுவன்
சிகாகோ: அமெரிக்காவில் நாய்க்குட்டியை தர மறுத்த 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டைச் சேர்ந்த 11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவின் டென்னிஸி மாநிலத்தில் உள்ள ஒயிட் பைன் நகரைச் சேர்ந்தவர் லடாஷா டயர். அவரின் மகள் மெக்கைலா(8). மெக்கைலா நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய்க்குட்டியை பார்த்துவிட்டு தருகிறேன் என்னிடம் கொடு என பக்கத்து வீட்டில் வசிக்கும் 11 வயது சிறுவன் அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு மெக்கைலா மறுத்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்குள் சென்ற சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து மெக்கைலாவின் மார்பில் சுட்டார். இதில் மெக்கைலா பரிதாபமாக உயிர் இழந்தார். போலீசார் சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தங்க வைத்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் தாய் லடாஷா கூறுகையில்,
நாங்கள் ஒயிட் பைன் நகருக்கு மாற்றலாகி வந்ததில் இருந்து அந்த சிறுவன் மெக்கைலாவை சீண்டிக் கொண்டே இருந்தான். அவர்கள் இருவரும் ஒரே பள்ளி என்பதால் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தேன். அதன் பிறகே சிறுவன் அமைதியாக இருந்தான். இந்நிலையில் என் மகளை சுட்டுக் கொலை செய்துவிட்டான்.
என் மகள் எனக்கு வேண்டும். உங்கள் குழந்தைகளை ஒவ்வொரு இரவும் கட்டிப்பிடித்து முத்தமிடுங்கள். ஏனென்றால் மறுநாள் அவர்களுடன் நாம் இருப்போமா என்பது தெரியாது என்றார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications