நான் தோத்துட்டேன்.. தேர்தல் செல்லாது! வழக்கு போட்ட பிரேசில் வலதுசாரி தலை! ப்பா இவ்வளவு கோடி அபராதமா?
பிரேசில்லா: பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த போல்சார்னோவிற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மிகப்பெரிய அபராதம் விதித்து உள்ளது. அவர் தொடுத்த வழக்கு ஒன்றின் காரணமாக உச்ச நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்து உள்ளது.
உலகம் முழுக்க வலதுசாரி தத்துவம் மீண்டும் வீழ தொடங்கி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மிக வேகமாக உலகம் முழுக்க வளர்ச்சி அடைந்த வலதுசாரி தத்துவம் மீண்டும் பாதாளத்தை நோக்கி செல்ல தொடங்கி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின் உலகம் முழுக்க வலதுசாரி தத்துவத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட தொடங்கி உள்ளது.

பிரேசில்
அந்த வகையில் தற்போது பிரேசிலில் தீவிர வலதுசாரியான ஜெய் போல்சார்னோ தோல்வி அடைந்து உள்ளார். பிரேசில் அதிபரான இவர், வலதுசாரி கட்சியை சேர்ந்தவர். இவரை எதிர்த்து முன்னாள் பிரதமரும், தொழிலாளர் கட்சியை சேர்ந்து இடதுசாரியுமான லூலா சில்வா போட்டியிட்டார். சில்வாவிடம் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற தேர்தலில் போல்சார்னோ தோல்வி அடைந்தார். பிரேசில் அதிபர் தேர்தலில் முதல் சுற்றில் சில்வா முன்னிலை பெற்றுள்ளார். ஆனால் வெற்றிபெறவில்லை. இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில் 50.9 % வாக்குகளை பெற்று அவர் வென்றார். இதில் இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில்தான் முறைகேடு நடந்ததாக போல்சார்னோ வழக்கு போட்டார்.

தேர்தல்
அவர் தேர்தல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், இந்த தேர்தலில் முறைகேடு நடந்து உள்ளது. பல வாக்குப்பெட்டிகளில் சிப் ஒன்றை பொருத்தி உள்ளனர். அந்த சிப் காரணமாக வாக்குப்பெட்டிகளில் பக் ஒன்று உருவாகி உள்ளது. இதனால் வாக்குகள் பெரிய அளவில் மாறி உள்ளன. இதனால் பல இடங்களில் நடந்த தேர்தலை மொத்தமாக செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சில்வா வென்ற இடங்களில் எல்லாம் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்து இருப்பதாக அவர் புகார் வைத்தார். இந்த வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

தீர்ப்பு
இதில்தான் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, நீங்கள் வைக்கும் கோரிக்கைக்கு ஆதாரம் இல்லை. நீங்கள் வெறுமனே சொல்வதால் தீர்ப்பை மாற்ற முடியாது. நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தலில் தவறு நடந்து இருந்தால் அதை வாதத்தின் போது நிரூபிக்க வேண்டும். நீங்கள் நிரூபிக்க தவறிவிட்டீர்கள். அதனால் உங்களுக்கு 35 கோடி ரூபாய் அபராதம் விதிக்கிறோம். தேர்தல் மீது நம்பிக்கை இன்றி நீங்கள் தொடுத்த வழக்கு காரணமாக இந்த அபராதத்தை விதிக்கிறோம். நீங்கள் அபராதத்தை விதிக்கும்படி உங்கள் அரசிடம் இருக்கும் நிதி மொத்தமாக நிறுத்தப்படும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோரிக்கை
பொதுவாக பிரேசிலில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கும். முதல் கட்டத்தில் 50 சதவிகித வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அப்படி பெற்றால் அவர்தான் அதிபர். அப்படி இல்லை என்றால் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும். முதல் கட்டத்தில் டாப் இரண்டு இடங்களுக்கு வந்தவர்கள் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடுவர். இதில் 50+ சதவிகித வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றார் அவர் அதிபர் ஆவார். எப்போதும் முதல் தேர்தல் அக்டோபர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை நடக்கும். அந்த வகையில் நடந்து முடிந்த தேர்தலில் சில்வா வெற்றிபெறவில்லை என்றாலும் 48.4 சதவிகிதம் வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றார். போல்சார்னோ வெறும் 43.2 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இரண்டாம் கட்ட தேர்தல்
அதன்பின் இரண்டாம் கட்ட தேர்தலில் 50.9 சதவிகித வாக்குகளை பெற்று சில்வா வென்றார். இவர் வரும் ஜனவரி மாதம் அந்நாட்டு அதிபராக தேர்வாக உள்ளார். சில்வா முன்னாள் அதிபர். சில்வா எண்ணெய் ஒப்பந்தம் ஒன்றில் முறைகேடு செய்ததாக ஜெயிலுக்கு சென்று , ஆட்சியை இழந்தார். 18 மாதங்கள் சிறையில் இருந்த இவர், குற்றம் செய்யவில்லை என்று உறுதியானதால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இவர் மிகவும் வலிமையான இடதுசாரி தலைவர் ஆவார். இவரின் வெற்றி உலகம் முழுக்க பல இடதுசாரி தலைவர்களை உற்சாகம் அடைய வைத்து உள்ளது. அதோடு பிரேசிலை பொருளாதார சரிவில் இருந்து மீட்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications