G7 நாடுகளை டம்மியாக்கும் BRICS.. இனி நம்மதான் கெத்து! இந்தியாவுக்கு கிடைத்த பெரிய சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைக்கவும், G7 நாடுகளுக்கு எதிராகவும் BRICS (பிரிக்ஸ்) அமைப்பு தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பிளாக் செயின் அடிப்படையிலான கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையை மேற்கொள்ள பிரேசில் யோசனையை முன்வைத்திருக்கிறது.

இது சாத்தியமானால் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் சூடுபிடிக்க தொடங்கும். இது இந்தயாவுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Brazil BRICS cryptocurrency

பிரேசில் அதிபர் சொன்னது என்ன?:

பிரேசில் அதிபர் லுலா டா சில்வா இது குறித்து கூறியதாவது, "பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பரிவர்த்தகனைகளை எளிமையாக்கும் விதமாக பிளாக் செயின் அடிப்படையிலான கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை முறையை உருவாக்க யோசித்து வருகிறோம். இதன் மூலம் வங்கி அமைப்புகளை நம்பியிருக்க வேண்டியதில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு எளிமையான முறையில் பணத்தை நம்மால் பரிமாற்ற முடியும். வேலையும் சீக்கிரம் நடக்கும். இதனால் வர்த்தகம் செய்வது எளிமையாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவும் பிரிக்ஸும்:

இந்த ஆண்டு ஜூலை மாதம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில் சார்பில் இதற்கான ஐடியா முன்வைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சரி இந்த விஷயத்தால் இந்தியாவுக்கு என்ன லாபம் என்பதை பார்ப்போம்.

பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. மேலும் இந்தோனேஷியா, சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா மற்றும் ஈரான் உள்ளிட்டவை புதியதாக இணைய உள்ளன. இந்தியாவை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக பிரிக்ஸ் உடன் வர்த்தகம் சிறப்பாக இருந்து வருகிறது.

பணம் கொழிக்கும் மரம்:

2002ம் ஆண்டு இந்தியாவுக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் வெறும் 8% தான் இருந்தது. ஆனால் 2018ல் இது 14% ஆக உயர்ந்தது. 2022ல் இந்த வர்த்தக மதிப்பு 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்தது. 2023ம் ஆண்டு நிலவரப்படி பிரிக்ஸ் நாடுகளின் தேவைகளில் இந்தியா 7.9% அளவுக்கு பூர்த்தி செய்கிறது. சிம்பிளாக சொல்வதெனில் பிரிக்ஸ் அமைப்பு இந்தியாவுக்கு பணம் கொழிக்கும் மரம் போன்றது.

ஆனால் இந்த வர்த்தகம் போதாது. இன்னும் விரிவான வியாபாரத்திற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பினும் இதனை சாத்தியப்படுத்த வேண்டும் எனில் பண பரிவர்த்தனைகளை வேகப்படுத்த வேண்டும். சென்னையிலிருந்து மதுரையிலிருக்கும் ஒருவருக்கு Gpay மூலம் பணம் அனுப்ப ஓரிரு நொடிகள் போதும். அதுவே, வெளிநாடுகளிலிருந்து பணம் பெற Gpay உதவாது. வேறு சில வங்கி பண பரிமாற்ற முறைகளை பின்பற்ற வேண்டும்.

அமெரிக்க டாலருக்கு மாற்றா?:

இதுவே இரு நாட்டு அரசாங்கத்திற்கு இடையே பண பரிமாற்றம் செய்ய வேண்டும் எனில் நிச்சயம் நேரம் எடுக்கும். போதாத குறைக்கு வங்கிகளுக்கு வேறு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பிரச்சனைகளை சரிகட்டதான் பிளாக் செயின் அடிப்படையிலான கிரிப்டோகரன்சி பண பரிவர்த்தனை முறையை கொண்டுவர பிரேசில் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

இது அமெரிக்க டாலருக்க மாற்றானதாக கருத முடியாது. இருப்பினும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை பிரிக்ஸ் நாடுகளின் வர்த்தகத்தை வேகப்படுத்தும். இதன் மூலம் ஜி7 நாடுகளுக்கு போட்டியாக பிரிக்ஸ் நாடுகளால் வளர முடியும். இந்த வளர்ச்சி இந்தியாவையும் உயர்த்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+