பிரேசிலில் ஒரே நாளில் 30,465 பேருக்கு கொரோனா- பாதிப்பு எண்ணிக்கை 8,05,649 ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

பிரெசில்லா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு பிரேசிலை மிக மோசமாக தாக்கி வருகிறது. பிரேசிலில் ஒரே நாளில் 30,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 75 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,23,080 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 38, 34,371 ஆகும்.

Brazil Records 30,465 Coronavirus Positives In 24 Hours

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரேநாளில் 23,225 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,89,626 ஆனது. கொரோனாவுக்கு 899 பேர் அமெரிக்காவில் நேற்று மட்டும் உயிரிழந்தனர். அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,16,029 ஆகும்.

அமெரிக்காவை தொடர்ந்து கொரோனா மிக மோசமாக பாதித்திருக்கும் நாடு பிரேசில். பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 30,465 பேருக்கு கொரோனா உறுதியானது. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டி 8,05,649 ஆக உள்ளது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 1,261 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இங்கு கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 41,058 ஆகவும் உயர்ந்திருக்கிறது.

Recommended Video

    Scientists Suspect Community Transmission existed - Scientists

    கொரோனா பாதிப்பில் ரஷ்யா 3-வது இடத்திலும் இந்தியா 4-வது இடத்திலும் இருக்கிறது. ரஷ்யாவில் மொத்தம் 5,02,436 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 8,779 பேருக்கு நேற்று கொரோனா உறுதியானது. இந்தியாவில் நேற்று மட்டும் 11,128 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. மொத்தம் 2,98,283 பேர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று மட்டும் 394 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 8,501 ஆக உள்ளது.

    பெரு, சிலி, மெக்சிகோ, பாகிஸ்தான், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பெருவில் 5,965, சிலியில் 5,596, மெக்சிகோவில் 4,883, பாகிஸ்தானில் 5,834 பேர் கொரோனாவால் நேற்று மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் 3,733 பேரும் வங்கதேசத்தில் 3187 பேரும் கொரோனாவால் ஒரே நாளில் பாதிக்கப்பட்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+