மோடிக்கு எப்படி விருந்து தரலாம்? கண்கள் சிவந்த சீனா.. பிரிக்ஸ் மாநாட்டை புறக்கணிக்கும் ஜி ஜின்பிங்!
பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ள 17-வது பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பிரேசில் அரசு விருந்து அழைப்பு காரணமாக சீன அதிபர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது
2013-ல் ஆட்சிக்கு வந்த பிறகு அவர் இந்த உயர்மட்ட வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்த செய்தியை சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) பல தூதரக வட்டாரங்களை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்காதது ஏன்?
ஜூலை 6-7 தேதிகளில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில், சீனக் குழுவுக்கு ஜி ஜின்பிங்கின் நெருங்கிய உதவியாளரும், தற்போதைய சீனப் பிரதமருமான லீ கியாங் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே 2023-ல் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் சீனாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.
இந்த நடவடிக்கையால் பிரேசில் அதிகாரிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரேசில் அதிபர் லூயிஸ் சில்வா மே மாதம் பெய்ஜிங்கிற்கு பயணம் மேற்கொண்டார் என்றும், சீன அதிபர் ரியோ மாநாட்டில் நேரில் கலந்துகொண்டு பதில் மரியாதையை செய்வார் என்று எதிர்பார்த்ததாகவும் பிரேசிலிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சீனாவின் முடிவால் தற்போது பிரேசில் அதிர்ச்சி அடைந்து உள்ளதாம்.
இதற்கு சீனாவோ, அதிபரின் வேறு பயண திட்டங்கள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. ஆனால், பிரேசில் அதிகாரிகள் வேறு காரணங்கள் இருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட அரசு விருந்து அழைப்பு காரணமாக சீன அதிபர் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மோடியும், லூலாவும் நெருக்கமாக இருப்பது ஜி ஜின்பிங்கிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
உலகளாவிய மன்றங்களில் எப்போதும் முன்னிலை வகிக்கும் ஒரு தலைவருக்கு, இந்தச் சூழ்நிலை ஒரு சிறிய பின்னடைவாகத் தோன்றலாம்.
சீனா மோதல்
சீன அதிகாரிகள், ஜி ஜின்பிங் மற்றும் லூலா ஏற்கனவே ஓராண்டுக்கு குறைவான காலத்தில் இரண்டு முறை சந்தித்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். முதலில் நவம்பர் 2023 இல் பிரேசிலியாவுக்கு அரசு முறைப் பயணமாக சென்றபோதும், பின்னர் மே 2024 இல் பெய்ஜிங்கில் நடந்த சீனா-CELAC மன்றத்திலும் சந்தித்தனர். இந்த அடிக்கடி சந்திப்புகள் இருப்பதால், மற்றொரு நேரடி சந்திப்பு அவசியமில்லை என்றும் சீனா நினைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், பிரேசில் இந்த புறக்கணிப்பை ஒரு ராஜதந்திர ரீதியான அவமதிப்பாகவே பார்க்கிறது. லூலாவின் சர்வதேச விவகாரங்களுக்கான சிறப்பு ஆலோசகர் செல்சோ அமோரிம், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியிடம் பிப்ரவரி மாதமே இந்த விஷயத்தை நேரடியாக எழுப்பியுள்ளார். "சீனா இல்லாமல் பிரிக்ஸ் இல்லை என்று நான் அவர்களிடம் சொன்னேன்.. அதனால் கண்டிப்பாக சீன அதிபர் மாநாட்டிற்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்" என்றுள்ளார்.
மோடி காரணமா?
மோடிக்கு பிரேசில் கொடுத்த முக்கியத்துவமே சீன அதிபரின் கோபத்திற்கு காரணம் என்கிறார்கள். லூலாவின் சொந்த மண்ணில் மோடிக்கு அரசு விருந்து அளிப்பது சீன அதிபருக்கு பிடிக்கவில்லை என்கிறார்கள்.
2020 லடாக் எல்லை மோதல்களுக்குப் பின்னர் மோடி-ஜின்பிங் இடையேயான உறவு சுமூகமாக இல்லை. இருவரும் அக்டோபர் 2024-ல் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் சந்தித்தாலும், உறவுகள் தொடர்ந்து பதற்றமாகவே உள்ளன. இரண்டு பேருமே இதுவரை பெரிதாக பேசிக்கொள்ளவில்லை. ஜி ஜின்பிங் ரியோவை தவிர்த்தால், இரு தலைவர்களுக்கும் இடையிலான அடுத்த சந்திப்பு இந்த ஆண்டு இறுதியில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் நடக்கலாம் என்று கூறப்படுகிறது .
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications