தடுப்பூசிக்காக 12 மணி நேரம் தந்தையை தோளில் சுமந்த மகன்.. அமேசான் காடுகளிலிருந்து நெகிழ்ச்சி பயணம்
ரியோ டி ஜெனீரோ: தடுப்பூசி போடுவதற்காக அமேசான் காட்டை சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் தனது தந்தையை 6 மணி நேரம் முதுகில் சுமந்து கொண்டு வந்த காட்சிகள் இணையத்தை நெகிழ செய்துள்ளன. அது போல் ஊசி போட்ட பிறகு வீடு திரும்ப மீண்டும் ஒரு 6 மணி நேரம் தனது முதுகில் சுமந்து கொண்டு சென்றுள்ளார் இந்த மகன்!
உலகளவில் கொரோனாவால் 32.17 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9.74 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. உலகில் தொற்று அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இந்தியா, மூன்றாவது பிரேசில்! இந்த நாட்டை பற்றி சொல்ல வேண்டுமானால் இதன் அதிபர் ஜெயிர் போல்சனேரோ கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.
அமேசான் காடுகளை கொண்ட இந்த நாட்டில் அதிபர் போல்சனேரோவே கடந்த கொரோனா 2-ஆவது அலையின் போது மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சென்று தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிட்டார். சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியும் லாக்டவுன் போட மறுத்துவிட்டார்.

கொரோனா
மேலும் கொரோனா ஒரு ஃப்ளூ காய்ச்சல். அது எதுவும் செய்யாது என அதிர்ச்சியான கருத்தை ஒரு அதிபரே கூறியதை கேட்டு உலகமே அதிர்ந்தது. எனினும் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தது தனிக் கதை! அதே போல் மருத்துவமனை கட்டமைப்புகள் பிரேசிலில் சரிவர இல்லை என்றே தெரிகிறது.

தனித்தீவு
கொரோனா தடுப்பூசி விஷயமும் பிரேசலில் சவாலான காரியமாக மாறி விட்டது. மற்ற நாடுகளில் தனித்தீவில், தொலைதூர காட்டில் இருக்கும் பழங்குடியினரையும் பல சவால்களை கடந்து தேடி சென்று சுகாதாரத் துறையினர் தடுப்பூசி போடுகிறார்கள். ஆனால் பிரேசிலில் நிலைமையே வேறு!

பழங்குடியின மக்கள்
அமேசான் காடுகளில் சோ எனும் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த இனத்தினர் 325 பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமானால் கால் கடக்க நீண்ட தூரம் நடந்து வந்து போட வேண்டியுள்ளது. இந்த நிலையில் அமேசான் காடுகளில் வசித்து வரும் பழங்குடியினத்தவர் வாஹு (67). இவருக்கு நீண்டநாட்களாக சிறுநீரக பிரச்சினைகள் இருப்பதால் அவரால் நடக்க முடியாது.

தடுப்பூசிக்காக 6 மணி நேரம் சுமந்த மகன்
மேலும் அவருக்கு பார்வையும் சற்று மங்கலமாகவே இருக்குமாம். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தனது தந்தைக்கு தடுப்பூசி போட அவரது 24 வயது மகன் தாவி முடிவு செய்தார். இதற்காக தனது முதுகில் தூளி போல் துணியால் கட்டி அதில் தந்தையை உட்கார வைத்து 6 மணி நேரம் காட்டு பாதையில் தூக்கிக் கொண்டு வந்தார்.

தந்தையை தோளில் தூக்கி வந்த மகன்
மருத்துவமனைக்கு வந்த அவருக்கும் அவரது தந்தைக்கும் டாக்டர் எரிக் ஜென்னிங்ஸ் சிமோஸ் தடுப்பூசியை செலுத்தினார். அப்போதுதான் தந்தையை தாவி முதுகில் தூக்கி வந்தது டாக்டருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஊசி போட்டுக் கொண்டு மீண்டும் அதே போல் தனது தந்தையை அவர் தூக்கி சென்ற காட்சிகளை டாக்டர் எரிக் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கொரோனா விழிப்புணர்வு
இதிலிருந்து இரு விஷயங்கள் புலப்படுகின்றன. தந்தை மீது இந்த மகனுக்கு எத்தனை பாசம்? இன்னொன்று பழங்குடியினத்தவர்கள் கொரோனா குறித்தும் அதை முறியடிக்க தடுப்பூசி குறித்தும் அறிந்திருக்கிறார்களே என்ற ஆச்சரியமும் இருக்கிறது. சில நாடுகளில் பல கஷ்டங்களை தாண்டி தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர் சென்றாலும் அவர்கள் சிலர் விரட்டியடிப்பதாக செய்திகள் வரும் நிலையில், தனது தந்தைக்காக 12 மணி நேரம் மகன் ஒருவர் முதுகில் சுமந்து சென்றிருக்கிறார் என்ற செய்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications