Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தும் 'பிரிக்ஸ்'.. இனி எல்லாம் இந்த நாடுகள்தான்! மாறும் சர்வதேச நிலைமை

Subscribe to Oneindia Tamil

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் புதியதாக 6 நாடுகள் இணைந்துள்ளன. இதன் மூலம் சர்வதேச எண்ணெய் உற்பத்தியில் 80% இனி பிரிக்ஸ் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள 'பிரிக்ஸ்' நாடுகளின் கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்த மாநாடு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடந்து வந்தது. இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக இம்மாநாட்டில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.

BRICS countries will now control 80 percent of the worlds oil resources

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றியிருந்த பிரதமர் நரேந்திர மோடி, "உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. இந்தியா விரைவில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும். உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும். இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. யுபிஐ தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.

சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த வளர்ச்சி தெற்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று பேசியிருந்தார். இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று சீன அதிபர் ஜி ஜிங்பிங்குடன் சுருக்கமாக கலந்துரையாடியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஜி20 விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும், சீன அதிபர் ஜி ஜிங்பிங் கடைசியாக ஒன்றாக சந்தித்து பேசிக்கொண்டனர்.

ஆனால் அடுத்த மாதமே லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் அடுத்து வந்த காலகட்டங்களில் மத்திய அரசு சீனா விஷயத்தில் கறார் காட்டி வந்தது. இப்படி இருக்கையில் இந்த மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொள்வார்களா? என்று கேள்வி எழுந்திருந்தது. அதேபோல இருவரும் கலந்துரையாடியுள்ளார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் புதியதாக 6 நாடுகள் இந்த அமைப்பில் சேர்ந்திருக்கின்றன. அதாவது, அர்ஜென்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகள் புதியதாக உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளன. பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணைவதற்கு சர்வதேச அளவில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இந்த 6 நாடுகள் மட்டும் உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

BRICS countries will now control 80 percent of the worlds oil resources

இதன் மூலம் சர்வதேச எண்ணெய் உற்பத்தியில் 80% இனி பிரிக்ஸ் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இதில் புதியதாக இணைந்துள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் அதிக அளவு எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. என்னதான் ஐரோப்பிய நாடுகள் புதைபடிம (பெட்ரோல்,டீசல்) எரிபொருளை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், உலகம் முழுவதும் நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இப்படி இருக்கையில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் நாடுகள் அனைத்து ஓரணியில் திரண்டிருப்பது, எண்ணெய் விற்பனையை அதிகரிக்க செய்யும். அதேபோல இந்த நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும். இதன் மூலம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவிகிதமாக இருக்கும். மறுபுறம் இந்த நாடுகள் தங்கள் சொந்த நாணயத்தில் வணிகம் செய்யும் திட்டத்தில் இருக்கின்றன. எனவே அமெரிக்க டாலின் மதிப்பும் இனி வரும் காலத்தில் சரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+