வரியா போடுற வரி.. டிரம்புக்கு பதிலடி கொடுக்கும் பிரிக்ஸ்! சிக்கலில் அமெரிக்கா!
ரியோ டி ஜெனிரோ: வரி மூலம் உலகத்தையே அச்சுறுத்தி வரும் ட்ரம்ப்புக்கு பதிலடி கொடுக்க பிரிக்ஸ் நாடுகள் தயாராகியுள்ளன. இதற்காக நாளை முக்கியமான கூட்டம் பிரேசிலில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், அமெரிக்காவின் வரி நடவடிக்கைக்கு எதிரானதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

நான் ஆட்சிக்கு வந்தால் 'அமெரிக்கா பர்ஸ்ட்' என்கிற கொள்கையை பின்பற்றுவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். அதேபோல அவர் அதிபரான பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இது உலக வர்த்தகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நமக்கு தெரிந்தது சீனா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் போட்ட வரி மட்டும்தான். ஆனால் அவர் வேறு சில வேலைகளையும் பார்த்திருக்கிறார்.
அதாவது, உலக வர்த்தக அமைப்பின் விதிகளை டிரம்ப் வெளிப்படையாகவே பின்பற்ற மறுத்திருந்தார். தனிநபர் நாடுகளுடன் நேரடி வர்த்தக உடன்பாடுகளை விரும்பினார். இது சர்வதேச வர்த்தக நடைமுறைக்கு எதிரானதாகும். மட்டுமல்லாது வெகு சீக்கிரத்திலேயே இதற்கான விளைவுகள் தெரிய தொடங்கிவிட்டன. குறிப்பாக உலகம் முழுவதும் நடைபெற்று வந்த வர்த்தகம் குறைந்தது. இது உலக பொருளாதாரத்தின் வளர்ச்சியை மந்தமாக்கியது.
உலக நாடுகளின் வளர்ச்சி குறித்து ஐஎம்எஃப் ஏற்கெனவே ஒரு அளவீட்டை கொடுத்திருந்தது. அதன்படி இந்த ஆண்டு, இந்த நாடுகள் எல்லாம் இவ்வளவு வளர்ச்சியடையும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், இந்த அளவீட்டை ஐஎம்எஃப் தற்போது திருத்தி அமைத்திருக்கிறது. அதாவது ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்த வளர்ச்சியை காட்டிலும் இந்த ஆண்டு வளர்ச்சி குறைவாகவே இருக்கும் என்று ஐஎம்எஃப் கூறியிருக்கிறது.
மறுபுறம் வரி அதிகரிப்பால் உற்பத்தி செலவுகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் முதலீடுகள் குறைந்தன, பணப்புழக்கத்தில் சிக்கல்கள் ஏற்பட்டன. இவையெல்லாம் சேர்த்து பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்தியிருக்கிறது. ஸ்டீல், அலுமினியம், தொழில்நுட்பம் மற்றும் ஆட்டோமொபைல் ஆகிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
எனவே இவற்றிற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு பிரிக்ஸ் நாடுகளுக்கு இருக்கிறது. எனவே நாளை நடக்கும் பிரிக்ஸ் நாடுகளின் தூதர்கள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. பிரேசிலிய வெளிவிவகார அமைச்சர் மவுரோ வியேரா இந்த கூட்டத்தை தலைமையேற்று நடத்துகிறார். இதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கீ லாவ்ரோவ் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக நாளை மாலை கூட்டு அறிக்கை வெளியாகும்.
இந்த அறிக்கைதான் மிக முக்கியமானதாகும். இதில் அமெரிக்காவின் பொருளாதார நிலைப்பாட்டிற்கு எதிராக பிரிக்ஸ் என்ன செய்யப்போகிறது என்பது தெரியப்படுத்தப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications