ஈரான் - அமெரிக்கா சண்டையில் உள்ளே வந்த பெரிய தலைக்கட்டு.. டிவிஸ்ட்.. விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை!
ஈரான் - அமெரிக்கா இடையில் நடக்கும் சண்டையில் தற்போது பிரிட்டனும் உள்ளே நுழைந்துள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: ஈரான் - அமெரிக்கா இடையில் நடக்கும் சண்டையில் தற்போது பிரிட்டனும் உள்ளே நுழைந்துள்ளது. ஈரான் அமெரிக்கா படைகளை தாக்கியது தவறு என்று பிரிட்டன் கூறியுள்ளது.
2020ம் ஆண்டு தொடக்கமே அமர்க்களமாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். தொடக்கமே, மூன்றாம் உலகப் போருக்கான வாய்ப்புகள் பிரகாசமாகி வருகிறது. ஈரான் - அமெரிக்கா இடையில் நடக்கும் சண்டை மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்கிறார்கள்.
கடந்த வாரம் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

என்ன நிலைப்பாடு
ஈரான் - அமெரிக்கா இடையில் நடக்கும் சண்டையில் தற்போது பிரிட்டனும் உள்ளே நுழைந்துள்ளது.இந்த சண்டையில் பிரிட்டன் அமெரிக்காவிற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளது. ஈரான் அமெரிக்கா படைகளை தாக்கியது தவறு என்று பிரிட்டன் கூறியுள்ளது.

முயற்சி
தற்போது பிரிட்டன் ஐரோப்பா யூனியனில் இருந்து வெளியே வரும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இதற்கான மசோதாவை தாக்கல் செய்யும் திட்டத்தில் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஈடுபட்டு வருகிறார். இதன் வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெல்லவும் வாய்ப்புள்ளது. இதனால் மிக விரைவில் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிவிடும்.

என்ன பிரிவு
இந்த பிரிவு கண்டிப்பாக பிரிட்டனுக்கு பொருளாதார நெருக்கடியை கொடுக்கும். இப்படிபட்ட சூழ்நிலையில் போரிஸ் ஜான்சன் போருக்கு செல்ல வாய்ப்பு இல்லை. பிரிட்டன் போரை குறித்து நினைக்காது. அது பிரிட்டனுக்கு பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கும் என்று கூறினார்கள்.

பெரிய நெருக்கடி
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரிட்டன் இந்த சண்டையில் ஈரானை கண்டித்து உள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியது தவறு. ஈரான் இப்படி செய்திருக்க கூடாது. ஈரானை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.

ஈரான் பதில்
இந்த நிலையில் சுலைமானி கொலையில் பிரிட்டனுக்கும் தொடர்பு இருக்கிறது. பிரிட்டன் அமெரிக்காவின் கையாள். அதனால் அவர்களின் கையிலும் ரத்தக்கறை இருக்கிறது. பிரிட்டனும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும் என்று ஈரான் கடுமையாக கண்டித்து இருக்கிறது.

படைகள்
இதனால் ஈரான் பிரிட்டன் இடையே சண்டை மூண்டுள்ளது. ஈரானை சமாளிக்கும் விதமாக ஈராக்கிற்கு பிரிட்டன் தனது படைகளை அனுப்ப உள்ளது. ஈரான் தாக்குதல் நடத்தினால் பிரிட்டன் உடனே திருப்பி தாக்கும். பிரிட்டனின் இரண்டு போர் கப்பல்கள், இரண்டு போர் விமானங்கள், இரண்டு ஹெலிகாப்டர்கள், 400 வீரர்கள் முதற்கட்டமாக ஈராக் சென்றுள்ளனர்.

போரிஸ் ஜான்சன்
பிரிட்டனில் தற்போது வலதுசாரி கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக இருக்கிறார். பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் போல ஐவரும் வலதுசாரி கொள்கை கொண்டவர். இவரின் வருகை இந்த போரில் மிக முக்கிய திருப்பதை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications