இங்கிலாந்து தொண்டு நிறுவன பணியாளர் தலையை துண்டித்து ஐ.எஸ். வெறியாட்டம்!
ரக்கா: இங்கிலாந்து நாட்டு தொண்டு நிறுவன பணியாளர் ஆலன் ஹென்னிங் என்பவரது தலையை துண்டித்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.' தீவிரவாதிகள் அமைத்துள்ளனர். இவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க தாக்குதல் நடத்தும் அமெரிக்கா மற்றும் அந்நாட்டுக்கு துணை போகும் இங்கிலாந்தை மிரட்ட இரு நாட்டு குடிமகன்களை பிணைக் கைதிகளாக்கி தலையை துண்டித்து கொலை செய்து வருகின்றனர்.

மூவர் தலை துண்டிப்பு
சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை திரட்டி வந்த அமெரிக்க நிருபர்கள் 2 பேரையும், இங்கிலாந்து தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சமூக சேவகர் டேவிட் ஹெய்ன்ஸ் ஆகிய 3 பேரையும் தலை துண்டித்து படுகொலை செய்தனர். அந்த வீடியோக்களை வெளியிட்டு சர்வதேச அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினர்.

ஆலன் ஹென்னிங் கடத்தல்
முன்னதாக வடமேற்கு இங்கிலாந்தின் மான்செஸ்ட்டர் பகுதியைச் சேர்ந்த ஆலன் ஹென்னிங் சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனங்களுக்கு வழிகாட்டியாக சென்ற போது 10 மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.

ஹென்னிங் தலை துண்டிப்பு
இந்த நிலையில் ஆலன் ஹென்னிங்கையும் கொலை செய்யப் போவதாக கடந்த வாரம் தீவிரவாதிகள் அறிவித்தனர். அவர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது.

கேமரூன் கடும் எச்சரிக்கை
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், மற்றவர்களுக்கு உதவி செய்யப்போன ஆலன் ஹென்னிங்கை கடத்திச் சென்று கொன்றதில் இருந்து இந்த தீவிரவாதிகள் எவ்வளவு காட்டுமிராண்டித்தனமானவர்கள்? என்பது தெளிவாகின்றது. இவர்களை வேட்டையாடி, நீதியின் முன்பு நிறுத்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்வோம் என்று அறிவித்துள்ளார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications