சர்ச்சிற்கு மாஸ்க் போடாமல் சென்ற பல்கேரிய பிரதமர்.. 13 ஆயிரம் அபராதம் விதித்த சுகாதார துறை அமைச்சர்
சோஃபியா, பல்கேரியா: பல்கேரிய பிரதமர் பாய்கோ போரிசோவ் பொது இடத்தில் மாஸ்க் அணியாத காரணத்தால் அவருக்கு 174 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதுவரை 91 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4.75 லட்சம் பேர் வரை பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அது வரை கொரோனா பரவலை முகக் கவசம் அணிவது, சமூக விலகலை பயன்படுத்துவது, கையுறைகளை அணிவது, கைகளை கழுவுவது ஆகியவற்றை செய்ய அறிவுறுத்தியுள்ளார்கள்.

மாஸ்க்
பெரும்பாலான நாடுகளில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முகக் கவசம் அணியாமல் செயல்பட்ட பல்கேரிய நாட்டு பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் பாய்கோ போரிசோவ் மாஸ்க் அணியாமல் தேவாலயத்திற்கு வந்திருந்தார்.

முகக் கவசம்
இவர் அந்நாட்டின் ரீலா மனொஸ்டோரி நகரில் உள்ள தேவாலயத்திற்கு சென்றார். அங்கு அவர் பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஈடுபட்டார். ஆனால் இந்த நிகழ்ச்சியின் போது அவர் முகக் கவசம் அணியவில்லை. மேலும் அவருடன் இருந்த அதிகாரிகள், நிருபர்கள் உள்ளிட்டோரும் முகக் கவசம் அணியாமல் விதிகளை மீறியுள்ளனர்.

அபராதம்
இதையடுத்து முகக் கவசம் அணிய வேண்டும் என்ற விதி அமலில் இருக்கும் போது அந்த உத்தரவை மீறி பல்கேரியா பிரதமர் பாய்கோ உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கிரில் அனனீவ் கூறுகையில் முகக் கவசம் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் உள்பட அனைவருக்கும் தலா 300 லிவிஸ் அதாவது 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பகிர்வு
கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து நாட்டில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது என அறிவித்தார். இது போல் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சட்டம் பொருந்தும் என காட்டப்பட்டால் மட்டுமே மக்கள் விதிகளை மதிப்பர் என சமூகவலைதளங்களில் கருத்து வைரலாக பகிரப்படுகிறது.












Click it and Unblock the Notifications