எல்லை அத்துமீறலை விட ஆபத்து.. தண்ணீரை ஆயுதமாக்கும் சீனா.. இந்தியாவின் பிளான் என்ன?

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையை சீனா கட்ட தொடங்கியுள்ளது. சீனாவின் இந்த அணை திட்டம் என்பது எல்லை அத்துமீறலைவிட ஏன் மோசமானது என்பது பற்றியும், இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவிடம் உள்ள திட்டங்கள் என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக உள்ள சீனா இந்தியாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆசியாவில் தன்னை யாராலும் அசைக்க முடியாத சக்தியாக வலம் வர வேண்டும் என்று திட்டமிடும் சீனாவுக்கு, பெரும் தலைவலியாக இருப்பது இந்தியாதான். பொருளாதார அளவிலும் சீனாவுக்கு கடும் போட்டியாக இந்தியா விளங்குகிறது.

Brahmaputra River China India China border dam

மிகப்பெரிய அணை கட்டும் சீனா

ஆசியாவில் சர்வ வல்லமை மிக்க நாடாக மாற வேண்டும் என்ற தனது கனவை இந்தியா நொறுக்குவதால், இந்தியாவுக்கு எதிரான செயல்களில் சீனா வேகம் காட்டுகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமாக உள்ள அருணாசல பிரதேசத்தை தங்கள் நாட்டிற்கு சொந்தமானது என்று உரிமை கோரும் சீனா, எல்லையிலும் கட்டுமானங்களை அதிகப்படுத்தி வருகிறது.

இது ஒருபக்கம் என்றால் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையை கட்டும் திட்டத்திற்கு சீனா அடிக்கல் நாட்டியுள்ளது. திபெத்தில் உருவாகும் இந்த நதி, சீனா, இந்தியா, வங்கதேசத்தை வளமாக்கி இறுதியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. மொத்தம் 2,900 கிலோமீட்டர் வரை இந்த நதி ஓடுகிறது.

தண்ணீர் வெடிகுண்டு

அருணாச்சல பிரதேசத்தின் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் பிரமாண்ட அணையை சீனா கட்டுகிறது. இந்திய மதிப்பில் ரூ.14.46 லட்சம் கோடி செலவில் இந்த அணையை கட்ட திட்டமிட்டுள்ளது சீனா.

இந்த அணை கட்டப்படுவதன் மூலம் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும் எனவும், நெருக்கடியான காலங்களில் இந்த அணையை திறந்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அபாயம் இருப்பதால் சீனாவின் இந்த அணை திட்டம் தண்ணீர் வெடிகுண்டு என்று பாதுகாப்பு வல்லுனர்களால் எச்சரிக்கை செய்யவும் படுகிறது.

ராணுவ அச்சுறுத்தலை விட மோசமானது

அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டுவும் சமீபத்தில் இந்த எச்சரிக்கையை முன் வைத்தார். சீனாவின் ராணுவ அச்சுறுத்தலை விட இந்த அணை திட்டம் மிகவும் ஆபத்தானது என்று கூறியிருந்தார். வாழ்வாதாரம் மற்றும் இருப்பிட அச்சுறுத்தலை இந்த அணை ஏற்படுத்தும் என்றும், இதை தண்ணீர் வெடிகுண்டாக கூட சீனாவால் பயன்படுத்த முடியும் என்று பெமா காண்டு கூறியிருந்தார்.

எனினும், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படும் நீர் மின் திட்டங்களால், நதியின் நீரோட்டம் பாதிக்கப்படாது என்றும், பல ஆண்டுகளாக ஆய்வு செய்து பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் சீனா கூறி வருகிறது. எனினும், சீனாவின் இந்த அணை திட்டமானது இந்தியாவுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதே இந்திய ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி

மேலும், இமயமலை நதிகளின் நீர் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டே சீனா திட்டமிட்டது. தற்போது அணை கட்டப்பட இருக்கும் பகுதியானது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக்கூடிய இடத்தில் உள்ளதாக சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் அணையில் சேமிக்கப்படும் நீரால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் எழுப்பப்படுகிறது. சீனாவின் மேற்கு பகுதியில் பல்வேறு அணைகள் கட்டப்படுகின்றன. என்.ஜீ.ஓ ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 130 க்கும் மேற்பட்ட அணைகள் இப்பகுதியில் கட்டப்பட்டு இருப்பது நிலநடுக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் இல்லை

சீனாவின் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியாவும் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் நீர் தேக்கங்களை கட்ட திட்டமிட்டுள்ளது. எனினும், இந்த திட்டங்களுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் இன்னும் தொடங்கவில்லை. அதேவேளையில், அப்பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

சியாங் மற்றும் மேல் சியாங் மாவட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏற்படும் என்றும், காயிங்கியாங் போன்ற நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் என்பதும் அவர்களின் அச்சமாக உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையே, நதி நீர் பங்கீடு தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தமும் இல்லை. கடந்த 2002 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

தக்க நடவடிக்கைகளை செய்யும்

இதன்படி, திறந்துவிடப்படும் நீரின் அளவு குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 மற்றும் அக்டோபர் 15 ஆம் தேதி தரவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த தரவுகளை வைத்து இந்தியா அதற்கேற்ற முன்னேற்பாடுகளை மழைக்காலங்களில் செய்யும். டோக்லாம் மோதல் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டு இந்த தரவு பகிர்வை சீனா நிறுத்தி வைத்தது.

பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் கொடுத்து வந்தாலும், தேவைப்படடால் தண்ணீரை அரசியல் ஆயுதமாக்க சீனா தயங்காது என்று இந்தியாவுக்கும் தெரியும். எனவே, இதனை கருத்தில் கொண்டு இந்தியாவும் தக்க நடவடிக்கைகளை மேற்கோள்ளும் என்றே பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+