கொத்து கொத்தாக.. கம்போடியாவுக்கு எதிராக தாய்லாந்து எடுத்த ஆயுதம்! இது மனித குலத்திற்கே எதிரானது
புனோம் பென்: எல்லையில் இருக்கும் கோயிலுக்காக தாய்லாந்து-கம்போடியா இரு நாடுகளும் போரில் ஈடுபட தொடங்கியுள்ளன. இந்நிலையில் கம்போடியா மீது தாய்லாந்து கொத்து குண்டுகளை வீசியிருப்பதாக புகார் எழுந்திருந்திருக்கிறது. கொத்துக்கு குண்டுகள் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டவையாகும்.
தாய்லாந்து ராணுவம் கொத்து வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவதைக் கடுமையாகக் கண்டித்துள்ள கம்போடியா, இந்த தாக்குதல்கள் இரண்டாவது நாளாக தொடர்வதால் அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச சட்டத்தை மீறும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கம்போடியா, கொத்து வெடிகுண்டுகள் பரந்த நிலப்பரப்பில் கடுமையான சேதத்தை ஏற்படுத்துவதோடு, குழந்தைகள் உட்பட பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் கடந்த 2008ம் ஆண்டு போடப்பட்ட உடன்படிக்கையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
மனிதாபிமானக் கொள்கைகளின் அடிப்படையில் மக்களின் உயிருக்கு மதிப்பளிக்காததோடு, அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், மக்கள் வசிக்கும் எல்லைகளில் கொத்து வெடிகுண்டுகளை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கம்போடியா தெரிவித்துள்ளது. அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, சர்வதேச மனிதாபிமான சட்டத்தை தாய்லாந்து மதிக்க வேண்டும் என்றும் கம்போடியா வலியுறுத்தியுள்ளது.
ஆட்கொல்லி கண்ணிவெடிகளை பயன்படுத்துதல், சேமித்து வைத்தல், உற்பத்தி செய்தல் ஆகியவற்றின் மீதான தடையை நாங்கள் கடுமையாக கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ள கம்போடியா, வன்முறை மற்றும் இராணுவ மோதலை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த பிரச்சனையை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபை, ஆசியான் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக கம்போடியா சுரங்க நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.
இன்று, தாய்லாந்து ராணுவம் தங்களுக்கு எதிராக கொத்து வெடிகுண்டுகளை மீண்டும் பயன்படுத்தியதாக கம்போடியா பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாலி சோச்சீட்டா குற்றம்சாட்டியுள்ளார். ப்ரீஹ் விஹார் மாகாணத்தில் உள்ள ஃபோம் கமோச் மற்றும் டெக்கோ தமாச்சேட் கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
சர்வதேச சட்டங்களை மீறுவது மட்டுமல்லாமல், கம்போடியாவிற்கு எதிரான ஆக்கிரமிப்பு மற்றும் மிருகத்தனமான செயலாகவும் கொத்து வெடிகுண்டுகளை பயன்படுத்துவது கருதப்படுகிறது என்று அவர் கண்டனம் தெரிவித்தார். மேலும், தாய் இராணுவம் ப்ரீஹ் விஹார் கோவில் மற்றும் வாட் கியோ சேகா கிரிரிஸ்வராக்கை கைப்பற்றியதாக தாய் ஊடகங்கள் தெரிவித்த செய்திகளையும் அவர் மறுத்தார். கம்போடிய துருப்புக்கள் இரண்டு தளங்களை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
தாய்லாந்து ராணுவம் கம்போடியாவிற்கு எதிராக கொத்து வெடிகுண்டுகளை பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டில், தாய்லாந்து ராணுவம் கம்போடியா உடனான மோதலில் கொத்து வெடிகுண்டுகளை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டது.
2008 கொத்து வெடிகுண்டு உடன்படிக்கை அமலுக்கு வந்த பின்னர் எந்த ஒரு நாடும் கொத்து வெடிகுண்டுகளை பயன்படுத்தக்கூடாது. ஆனால் இந்த தடையை மீறி கொத்து குண்டுகளை பயன்படுத்தி ஒரே நாடு தாய்லாந்து மட்டும்தான். ஏனெனில் கொத்து குண்டு தடை ஒப்பந்தத்தில் தாய்லாந்தும் கம்போடியாவும் கையெழுத்திடவில்லை.
இருப்பினும், ஆட்கொல்லி கண்ணிவெடிகளை பயன்படுத்துதல், சேமித்து வைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் மாற்றுதல் ஆகியவற்றின் மீதான தடை மற்றும் அவற்றின் அழிவு குறித்த உடன்படிக்கையில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications