Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரம்மப்புத்திரா நதியை சீனாவால் நிறுத்த முடியுமா? இந்தியாவுடன் ஒப்பந்தம் எதுவும் உள்ளதா? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: பாகிஸ்தானுக்குப் போகும் நீரை இந்தியா நிறுத்தினால், இந்தியாவுக்குப் போகும் நீரைச் சீனாவும் நிறுத்தும் எனச் சீனாவின் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் ஜிகாய் காவ் பேசியிருக்க கூடிய நிலையில், பிரம்மப்புத்திரா நதியை சீனாவால் நிறுத்த முடியுமா? இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் எதுவும் உள்ளதா? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. இதில் குறிப்பாக சிந்து நதி நீர் ஒப்பந்ததம் ரத்து அமைந்து இருந்தது. பாகிஸ்தானின் 80 சதவீத விவசாயம் சிந்து நதி நீரை நம்பியிருப்பதால், இந்தியா அந்த நீரை நிறுத்த எடுத்து இருக்கும் முடிவு பாகிஸ்தானுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

can-china-s-brahmaputra-gambit-disrupt-india-s-water-security

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாகச் சீனா இப்போது சில கருத்துகளைத் தெரிவித்துள்ளது. பீஜிங்கில் உள்ள சீனா மற்றும் உலகமயமாக்கல் மையத்தின் துணைத் தலைவர் விக்டர் ஜிகாய் காவ், இந்தியாவுக்குப் பிரம்மப்புத்திரா நதியிலிருந்து தண்ணீர் வருவதைச் சீனா நிறுத்தக்கூடும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்திருந்த நிலையில், அதற்கு அதிருப்தி தெரிவித்த பிறகே விக்டர் இந்த கருத்துகளைக் கூறினார்.

பிரம்மப்புத்திரா நதி

இந்தியாவின் நீர் பாதுகாப்புக்கு மிக முக்கியமான நதியாக பிரம்மப்புத்திரா உள்ளது. திபெத்தில் உள்ள திபெத்தில் உள்ள ஆங்சி பனிப்பாறையில் உருவாகக்கூடிய பிரம்மப்புத்திரா நதி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக வங்கதேசத்திற்கு செல்கிறது. புவியியல் அதிசயமாக அமைந்து இருக்கும் இந்த நதியை இந்தியா - சீனா இடையே புவிசார் அரசியலுக்கான கருவியாக மாற்ற சீனா முயற்ச்சித்து வருகிறது.

திபெத்தின் மெடோக் கவுண்டியில் 137 பில்லியன் செலவில் பிரமாண்ட நீர் மின் திட்டத்தை சீனா மேற்கோண்டுள்ளது. 60 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்படுகிறது. வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த நீர் மின் திட்டமாக இது இருக்கும் எனத் தெரிகிறது. இந்திய எல்லையில் இருந்து வெறும் 30 கிலோ மீட்டர் தொலைவில் தான் இந்த ஹைட்ரோ எலக்ட்ரிக் திட்டம் அமைகிறது.

40 சதவீத நிலப்பரப்புகள்

இந்த அணை உடைந்தால், அருணச்சாலப் பிரதேசம் மறும் அசாம் மாநிலங்கள் சில நிமிடங்களில் பேரழிவை சந்திக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இயல்பான அளவு நீர் ஓடும் போது, பிரம்மப்புத்திரா நதியின் நீரோட்டத்தை சீனாவால் கட்டுப்படுத்த முடியும். இது அந்த நதியின் கீழ் படுகையில் உள்ள இடங்களை பாதிக்கும். பருவமழை காலங்களில் அதிகப்படியான தண்ணீரை திறந்து விடுவது போன்ற சித்து விளையாட்டுக்களில் சீனா தற்போதே ஈடுபட்டு வருகிறது.

இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் பெருமளவு வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. 40 சதவீத நிலப்பரப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடியவையாக உள்ளது. பிரம்மப்புத்திரா ஆற்றுப்படுகை மிகப்பெரியது. சீனா இந்தியா, பூடான் மற்றும் வங்கதேசத்தில், 5 லட்சத்து 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு இது அமைந்துள்ளது. பிரம்மப்புத்திரா நதியில் 33.6 சதவீதம் இந்தியாவின் வழியாக மட்டும் ஒடுகிறது.

பிரம்மப்புத்திரா நதி நீர் ஒப்பந்தம்

விவசாயம், குடிநீர், நீர் மின் திட்டமாக இது செயல்படுகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் போல இந்தியா - சீனா இடையே, பிரம்மபுத்திரா நதி தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் இல்லை. இருநாடுகளுக்கும் இடையே சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டும் போடப்பட்டுள்ளன. எனினும், பிரம்மபுத்திரா நதி விவகாரத்தில் சீனாவின் கை ஓங்கியுள்ளது. இதனால், அந்த நாடு ஒருதலைபட்சமாக கூட செயல்பட முடியும் நிலையே உள்ளது.

பிரம்மப்புத்திரா நதி விஷயத்தில் தெளிவான ஒப்பந்தங்கள் இல்லாதது ஆகியவை வைத்து பார்க்கும் போது, புவிசார் அரசியல் பதற்றத்திற்கு ஒரு கருவியாக பயன்படுத்தப்படுமோ என்ற ஒரு அச்சமும் எழுகிறது. எனினும், இந்தியா - சீனா இடையேயான உறவை கையாளும் விவகாரத்திலும் பாகிஸ்தானுடனான உறவை கையாளும் விவகாரத்தில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.

அடுத்த எல்லையாக தண்ணீர்?

இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கு மொதலுக்கு பிறகும் கூட இருநாடுகளும் தொடர்ச்சியாக ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. பாகிஸ்தானை போல சீனா பயங்கரவாதத்தை ஊக்குவிகும் நாடாக இல்லை. எனவே பாகிஸ்தானுடனான பிரச்சினைக்கும் சீனாவுடனான பிரச்சினைக்கும் வேறுபாடுகள் உள்ளது என்பது சர்வதேச நோக்கர்கள் கருத்தாக உள்ளது. எனினும், விக்டர் கோயின் கருத்து ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. ஆசியாவின் வல்லரசு போட்டிக்கு இடையில், தண்ணீர் அடுத்த எல்லையாக மாறக்கூடும் என்று கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+