பாகிஸ்தானுக்கு செக்! “இந்தியாவுடன் நட்பு தொடரும்..” கனடா பிரதமர் வேட்பாளர் கார்னி அறிவிப்பு
ஒட்டாவா: கனடாவில் இன்று பிரதமர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இந்தியாவுடனான உறவு தொடரும் என்று லிபரல் கட்சி வேட்பாளர் மார்க் கார்னி கூறியிருக்கிறார். இதன் மூலம் காலிஸ்தான் பிரச்சனைக்கும், பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் செக் வைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
கனடாவில் இந்தியாவுக்கு எதிரான அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக கவலை எழுந்திருக்கும் நிலையில், மார்க் கார்னியின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன.

கனடாவில் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்துவது, காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக அரசியல் செயல்பாடுகளை நடத்துவது என ஒரு குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இக்குழுவுக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில்தான் இந்தியா-கனடா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கு காரணம் 2023ல் நடந்த சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை சம்பவம்தான்.
இவர் மீது இந்தியாவில் ஏகப்பட்ட வழக்குகள் இருந்தன. எனவே இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்று நாம் கேட்டிருந்தோம். கனடா ஒப்புக்கொள்ளவில்லை. கனடா கொடுத்த தைரியத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜர், அங்கிருந்துக்கெண்டே இந்தியாவில் இயங்கும் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தார். இதனையடுத்துதான் 2023ல் கொலை செய்யப்பட்டார். கொலையில் இந்தியர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. இந்தியா இந்த கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் விமர்சித்தது.
இதனையடுத்துதான் இந்தியா-கனடா உறவு பாதிக்க தொடங்கியது. மறுபுறம் அமெரிக்காவின் வரி அழுத்தம் கனடாவை கடுமையாக பாதித்தது. இந்த அழுத்தங்களால் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார். அவர் சார்ந்து இருந்த லிபரல் கட்சியிலிருந்து மார்க் கார்னி என்பவர் அடுத்த பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் அவருக்கு எதிர்ப்புகள் எழுந்தன. எனவே இதனை சமாளிக்க கார்னி தேர்தலை அறிவித்தார்.
தற்போது லிபரல் கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் "இந்தியாவுடன் கனடாவுக்கு ஒரு ஆழமான உறவு உள்ளது. அது பொருளாதார ரீதியாக, இராஜதந்திர ரீதியாக மற்றும் தனிப்பட்ட முறையிலும் முக்கியமானது. எனவே நான் அதிகாரத்திற்கு வந்தால் இந்தியாவுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்க்கப்படும்.
இரு நாடுகளும் ஒரே பொருளாதார தேவைகளை பகிர்ந்துக்கொள்ளும் நாடுகளாக இருக்கின்றன. ஆனால் கடந்த காலங்களில் உறவு மோசமடைந்துள்ளது. எனவே இப்போது இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, புதிய உறவுகளை உருவாக்குவோம்" என்று கூறியுள்ளார்.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக உரசல் போக்குகள் இருந்த நிலையில், அவர் இவ்வாறு பேசியிருப்பது, இனி வரும் நாட்களில் மோதல் போக்கு முடிவுக்கு வரும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கூறுகின்றனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications