கனடா: போலீஸ் நாயை கொன்றவருக்கு 26 மாத சிறை... 25 ஆண்டுகள் செல்லப்பிராணி வளர்க்க தடை
டொராண்டோ: கனடா நாட்டில் குடிபோதையில் போலீஸ் நாயைக் குத்திக் கொன்ற இளைஞருக்கு 26 மாதங்கள் சிறை தண்டனையும், 25 ஆண்டுகள் செல்லப் பிராணிகளை வளர்க்கத் தடையும் விதிக்கப் பட்டுள்ளது.
கனடா நாட்டின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள எட்மொண்டன் பகுதியை சேர்ந்த பால் ஜோசப் உக்மனிச்(27) என்ற இளைஞர், கடந்த அக்டோபர் மாதம் அளவுக்கதிகமான மது அருந்தி விட்டு காரை திருடிச் சென்றுள்ளார்.
தகவலறிந்த போலீசார் அவரை வழி மறித்தனர். போலீசைக் கண்டதும் காரை நிறுத்தி விட்டு தப்பியோட முயற்சி செய்துள்ளார் ஜோசப். அவரைப் பிடிப்பதற்காக போலீஸ் நாய் ஏவப்பட்டது.
ஜெர்மென் ஷெப்பர்ட் இனத்தை சேர்ந்த அந்த நாய் ஆக்ரோஷத்துடன் பால் ஜோசப்பை விரட்டியபடி ஓடியது. போலீசார் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் ஓடிக் கொண்டிருந்த ஜோசப் திடீரென தனது பேண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை உருவி நாயை வெறித்தனமாக குத்திக் கொன்றார்.
இதையடுத்து ஜோசப் கைது செய்யப்பட்டார். அவர் மீது அளவுக்கு அதிகமான போதையில் இருந்தது, திருட்டுக் காரை ஓட்டி வந்தது, நாயை குத்திக் கொன்றது என தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் முடிவில், போலீஸ் நாயை குத்திக்கொன்ற வழக்கில் ஜோசப்புக்கு 26 மாத சிறை தண்டனை விதித்த நீதிபதி, இன்னும் 25 ஆண்டுகளுக்கு அவர் எந்த செல்லப் பிராணியையும் வளர்க்க கூடாது எனவும் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications