உலகத் தமிழர்களுக்கு தமிழில் பொங்கல் நல் வாழ்த்துகளை தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!
ஒட்டாவா: உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் விழாவான பொங்கல் திருநாளுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தமிழர்கள் விரிந்து பரந்து வாழும் நாடுகளில் பொங்கல் திருவிழா எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் என்ற தனித்துவத்தை வெளிப்படுத்த, பண்பாட்டு அடையாளமாக திகழ்வது பொங்கல் திருவிழா.

போகி, பொங்கல் விழா, மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தமிழர் இல்லந்தோறும் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாப்படுவது வழக்கும். பொங்கல் விழாக்காலத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழரின் வீரத்தை வெளிப்படுத்தக் கூடியது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஏறு தழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜல்லிகட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்ட போது உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த அமைதிப் புரட்சியை தமிழ்நாட்டு தமிழர்கள் நடத்தி வெற்றி பெற்றனர்.
தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழருக்கு பொங்கல் நல்வாழ்த்துகளை அந்நாட்டு தலைவவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பிரதமர் மோடி, அனைவருக்கும், குறிப்பாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்குப் பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்தப் பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும் என வாழ்த்தி இருந்தார்.

இதேபோல் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில், உலகத் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதை வீடியோவாகவும் ஜஸ்டின் ட்ரூடோ பகிர்ந்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ தமது வாழ்த்து செய்தியில், கனடா, உலக நாடுகளில் தமிழ் சமூகங்கள் அறுவடைத் திருநாளான தை பொங்கலைக் கொண்டாடுகின்றனர். இந்த விழாவின் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி இயற்கைக்கு நன்றி செலுத்துகின்றனர்.
அனைவருக்கும் அமைதி, நல்ல ஆரோக்கியம் வேண்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் என அந்த வீடியோவில் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications