போச்சே! இந்தியாவுடன் மோதலுக்கு நடுவே.. சொந்த நாட்டிலேயே கடும் எதிர்ப்பு? கையை பிசையும் ட்ரூடோ
ஒட்டாவா: இந்தியாவுக்கு எதிராக கடுமையான மோதல் போக்கை கையாண்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு சொந்த நாட்டில் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து இருப்பது அந்நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தேடப்பட்டு வந்த நிஜ்ஜார், ஜூன் 18 அன்று, கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1990-களின் பிற்பகுதியில் கனடாவுக்குச் சென்ற நிஜ்ஜார், 2020-ல் இந்தியாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். நிஜ்ஜார் கொலைக்கு பின்னணியில் இந்திய ஏஜெண்டுகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரடியாக குற்றம் சாட்டியிருப்பது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பலத்த விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கனடா குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் மற்றும் மறுப்பு வெளியிட்டு உள்ளது.
கனடா குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது, என்று இந்திய வெளியுறவுத்துறை தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளது. இப்படியாக இந்தியாவுடன் கடுமையான மோதல் போக்கை ட்ரூடோ கையாண்டு வரும் நிலையில், அவரது செல்வாக்கு சொந்த நாட்டிலேயே கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கனடாவில் உள்ள Ipsos poll என்ற கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவரும் எதிர்க்கட்சி தலைவருமான பியாரே போயிலிவேர் பிரதமராக 40 சதவீதம் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இன்று தேர்தல் நடைபெற்றால் 39 சதவீத வாக்குகளுடன் பியாரே போயிலிவேர் பிரதமர் ஆவார் என்று கருத்துக் கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு பிரதமராக தேர்வு ஆன ட்ரூடோ, 30 சதவீத வாக்குகள் மட்டுமே பெறுவார் என்று கருத்துக் கணிப்பு கூறுவதாக கனடாவில் உள்ள குளோபல் நியூஸ் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கனடாவில் பொதுத்தேர்தல் வரும் 2025 ஆம் ஆண்டுதான் நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஒரு சர்வேயில் கனடாவின் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில் மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோதான் என்று முடிவுகள் வெளியானது. இதில் சுவாரசியமான மற்றொரு விஷயம் என்னவென்றால் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையும் முன்னாள் பிரதமருமான பியேரே ட்ரூடோ கனடா வாக்காளர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமான பிரதமராக உள்ளார்.
கனடாவில் கடந்த 1968 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரையும் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரையும் பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவுக்கு எதிராக கடுமையான மோதல் போக்கை கையாண்டு வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு கடுமையாக சொந்த நாட்டில் சரிந்து இருப்பது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காலிஸ்தான் இயக்கத்தினருக்கு எதிராக மென்மையான போக்கை கையாண்டு வருவதாக ஜஸ்டின் ட்ரூடோ மீது ஒரு குற்றச்சாட்டு நாட்டில் உள்ளது.
-
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications