இந்தியாவுக்கு பேரிடி.. ஈரான் போரில் நடக்ககூடாத சம்பவம்! இஸ்ரேல், அமெரிக்கா அட்டாக்கால் பேராபத்து
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் உக்ரமாக போர் புரிந்து வருகின்றன, ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு துறை சார்ந்த தளங்கள் உள்ள சவுதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் பதற்றம் உச்சமடைந்துள்ளது. இந்நிலையில், தான் ஈரானை குறிவைத்து தாக்கும் அமெரிக்கா, இஸ்ரேலால் நம் நாட்டுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேலும் அமெரிக்காவும் மீண்டும் தீவிர போரை நேற்று தொடங்கியது. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். இன்று 2வது நாளாக போர் நடந்து வருகிறது. உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி பலியாகி உள்ளதால் ஈரான் தலைமை இன்றி தவிக்கும் சூழல் உள்ளது.

ஈரானை எடுத்து கொண்டால் ஏவுகணைகளை தடுக்கும் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு, அதிநவீன ரேடார் அமைப்புகள் கிடையாது. இந்த தொழில்நுட்பங்களில் பின்தங்கி உள்ளது. இதனை பயன்படுத்தி தான் இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் ஈரானை பந்தாடி வருகிறது. ஏவுகணைகளை கொண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியாவுக்கு சிக்கல்
நேற்றைய தினம் மட்டும் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா காமேனியின் அலுவலக இல்லம், உளவுத்துறை அலுவலகம், பிரதமர் அலுவலகம், அணுசக்தி திட்டங்களை வகுக்கும் கூட்டமைப்பின் கட்டடம் உள்பட மொத்தம் 100 இடங்களை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலால் நம் நாட்டுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஈரான் – இந்தியா உறவு
அதாவது நம் நாடும், ஈரானும் நல்ல நட்பு நாடுகள் தான். ஒருகாலத்தில் ஈரானிடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினோம். ஆனால் ஈரான் மீது அமெரி்க்கா விதித்த பொருளாதார தடையால் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினோம். இருப்பினும் கூட நமக்கும், ஈரானுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இந்நிலையில் தான் இஸ்ரேல், அமெரிக்க படைகள் நடத்திய குண்டு வீச்சில் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சபாஹர் துறைமுகம் அட்டாக்
அதாவது, இஸ்ரேல், அமெரிக்காவின் ஏவுகணைகள், போர் விமானங்கள் மேற்கு ஈரான், டெஹ்ரானை தாண்டி, ஈரானின் முக்கிய துறைமுக நகரான சபாஹர் நகரிலும் குண்டு மழை பொழிந்து இருக்கின்றன. இது ஈரானுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். ஈரானின் மிகப்பெரிய ராணுவ தளமும் இங்கு உள்ளது. ஈரானுக்கு கடல்சார்ந்த வர்த்கத்துக்கு இந்த துறைமுகம் தான் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் அதனை முடக்கும் வகையில் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா முதலீடு
இங்குள்ள சபாஹர் துறைமுகம் ஈரான் மட்டுமின்றி நம் நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த துறைமுகத்தில் நம் நாடு பெரிய அளவில் முதலீடுகளை செய்துள்ளது. இங்கு மொத்தம் 2 முனையங்கள் இருக்கின்றன. இதில் ஒன்றை கையாளும் ஒப்பந்தத்தில் 2024ம் ஆண்டு நம் நாடு கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தம் 10 ஆண்டுகளுக்கு செல்லும். ஒப்பந்த மதிப்பு 370 மில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் சுமார் 3,250 கோடி ரூபாயாகும். மத்திய அரசின் இந்தியா போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (IPGL) நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை செய்தது. இதன்மூலம் நம் நாடு நேரடியாக மும்பையில் இருந்து சபாஹர் துறைமுகத்தை அணுக முடியும்.
இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?
அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதாக வர்த்தகம் செய்ய முடியும். மேலும் பாகிஸ்தானை தவிர்த்து நேரடியாக பொருட்களை நம் நாடு ஆப்கானிஸ்தான் வழியாக பிற மத்திய கிழக்கு, கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடல் வழியாக கொண்டு செல்ல முடியும்.
பாகிஸ்தானுக்கும், நமக்கும் பிரச்சனை உள்ளது. இதனால் பாகிஸ்தான் வழியாக பிற நாடுகளுக்கு வர்த்தகம் செய்வதில் சிக்கல் உள்ளது. இதனால் பாகிஸ்தானை தவிர்த்து சிக்கலின்றி பிற நாடுகளுக்கு வர்த்தகம் செய்ய மாற்று வழியை உருவாக்கும் வகையில் இந்த திட்டத்தை நம் நாடு முன்னெடுத்தது.
வன்மத்தில் அமெரிக்கா
இதனால் இந்த துறைமுகம் நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இப்படியான சூழலில் சபாஹர் நகரில் இஸ்ரேல், அமெரிக்கா குண்டு வீசி இருப்பது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நம் நாடு சபாஹர் துறைமுகம் சார்ந்த ஒப்பந்தத்தை ஈரானுடன் மேற்கொண்டபோது அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
கடந்த ஆண்டு இறுதுஇயுஇலுஅ இந்த துறைமுகம் மேம்பாட்டுக்கு நிதி உதவி செய்வதை தடுக்கும் வகையில் அமெரிக்கா பொருளாதார தடையும் விதித்தது. 6 மாதத்தில் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கூறியது. இதனால் சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் நம் நாடு சபாஹர் துறைமுகம் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை. இதனால் ஈரான் கவலையடைந்தது. இருப்பினும் தொடர்ந்து ஈரானுக்கும், நம் நாட்டுக்கும் இடையே இந்த துறைமுகம் வழியாக சரக்கு பரிமாற்றம் நடந்து வந்தது.
தற்போதைய நிலவரம் என்ன?
நேற்றைய தாக்குதலில் சபாஹர் துறைமுகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் போர் இன்னும் முடியவில்லை. ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா பெரும்படையை வைத்து இதுவரை இல்லாத அளவுக்கு ‛அட்டாக்' செய்யும் என டிரம்ப் மிரட்டி உள்ளார்.
இதனால் சபாஹர் துறைமுகம் கூட தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இதனால் இஸ்ரேல், அமெரிக்க நாடுகள் சேர்ந்து தொடுத்துள்ள இந்த போர் என்பது நம் நாட்டுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும். பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும் சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து இருநாடுகளின் உறவு, வர்த்தகம் பற்றி பேசியிருந்தார்.
இதனால் இஸ்ரேலும், அமெரிக்காவும் நம் நாட்டின் நலன் கருதி சபாஹர் துறைமுகத்தை தாக்காது என்கின்றனர் ஒரு தரப்பினர். ஆனால் இன்னொரு தரப்போ போரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்றனர். இதனால் இஸ்ரேல் - அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதல் நம் நாட்டுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது.
-
பயங்கரமாக சொதப்பிய பாகிஸ்தான்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வி! மோசமடையும் நிலைமை -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
அமெரிக்காவுக்கு அடிமேல் அடி! சக்தி வாய்ந்த போர் விமானத்திற்கு நேர்ந்த கதி.. கெத்து காட்டும் ஈரான்! -
நடுக்கடலில் கச்சா எண்ணெய் உடன் யூடர்ன் போட்ட ஈரான் கப்பல்.. இந்தியாவுக்கு வராமல் சீனா நோக்கி பயணம்! -
சோப்பு, சீப்பு, எண்ணெய் எல்லாம் விலை உயரபோகுது.. வார்னிங் கொடுக்கும் ரிப்போர்ட்! -
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்? -
அமெரிக்கா ஈரானை அடித்த அடி.. ஏழைகள் வயிற்றில் விழுது! கிடைக்காத கேஸ் சிலிண்டர்.. கடைகளுக்கு பூட்டு! -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம்












Click it and Unblock the Notifications