அமெரிக்க அதிபரானார் டொனால்ட் டிரம்ப்: சென்னை சாணக்யா மீன், சீனா குரங்கு கணித்தது பலித்தது
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தான் வெற்றிபெறுவார் என சென்னையின் சாணக்கா மீனும் சீனவின் குரங்கும் கணித்தது பலித்துள்ளது.
வாஷிங்டன்: உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில் அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று சீனா குரங்கும், சென்னையின் சாணக்யா மீனும் கணித்தது பலித்துள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்க்கும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கருத்துக்கணிப்புகள் மாறி மாறி வந்து தேர்தல் களத்தில் பரபரப்பை அதிகரித்தது.
இந்நிலையில், இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று சென்னையில் சாணக்யா என்ற மீன் கணித்து கூறியுள்ளது. டிரம்ப் படம் ஒட்டப்பட்ட ஒரு டப்பாவும், ஹிலாரி படம் ஒட்டப்பட்ட ஒரு டப்பாவும் அந்த மீன் தொட்டியில் வைக்கப்பட்டது. சாணக்யா மீன் தனது வாயினால் டிரம்ப் படம் ஒட்டப்பட்ட டப்பாவை தொட்டது. மீனின் ஆருடம் இப்போது பலித்துள்ளது. இந்த சாணக்யாதான் 2014ல் இந்தியா கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வெல்லும் என்று கணித்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷியான் ஏரி நிர்வாகத்துக்குச் சொந்தமான குரங்கு மூலம் அமெரிக்க அதிபராக யார் வருவார் என்று கணிக்கப்பட்டது.
இதற்காக இரு வேட்பாளர்களின் உருவபொம்மைகளுக்கு மத்தியில் அமரவைக்கப்பட்ட குரங்கு, இருவரின் உருவ பொம்மைகளையும் மாறி மாறி பார்த்து யோசித்தது. பின்னர் டக் என்று டொனால்ட் ட்ரம்பின் உருவபொம்மைக்கு முத்தமிட்டது. இதன் மூலம் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று அந்த சீன குரங்கு கணித்தது. இதுவே இப்போது பலித்துள்ளது.
அமெரிக்க ஆட்சி நிர்வாகத்தில் நேர்மையை மீட்டெடுப்பதுதான் தற்போது உள்ள மிகப்பெரிய சவால் என்று தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது கூறினார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க அதிபரா டிரம்ப் செய்யப்போகும் சாதனை என்ன? என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications