பற்றி எரியும் டாக்கா விமான நிலையம்.. சென்னை-வங்கதேச விமான சேவை பாதிப்பு! பயணிகள் அவதி
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் கடும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக டாக்கா விமான நிலையும் முற்றிலும் முடங்கியுள்ளது. விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். இருப்பினும் தீ வேகமாக பரவி வருவதால் அதை கட்டுப்படுத்துவதில் கடும் சவால் ஏற்பட்டிருக்கிறது. தீ விபத்து காரணமாக சென்னை-டாக்கா விமான சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.

தீ விபத்து குறித்து உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்திருப்பதாவது, "டாக்காவின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தின் சரக்குப் பிரிவில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அனைத்து விமானச் சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தீ விபத்து மதியம் 2:15 மணியளவில் நிகழ்ந்தது. விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கவ்சர் மஹ்மூத் இதை உறுதிப்படுத்தினார்.
தீ விபத்து ஏற்பட்ட உடனேயே, விமான நிலையத்தின் தீயணைப்புப் பிரிவினர், பங்களாதேஷ் விமானப்படை தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பிற வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இணைந்து செயல்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications