மலேசிய விமான விபத்தில் சென்னைப் பெண் பலி: குடும்பத்தினர் சோகம்
சந்திரிகாவுக்கு கல்லூரி செல்லும் மகள் ஒருவர் உள்ளார். சந்திரிகா விமான விபத்தில் சிக்கி பலியான தகவல் அறிந்து வேளச்சேரியில் உள்ள அவரது குடும்பத்தினர் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.கோலாலம்பூர்: வியட்நாம் அருகே விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரிகாசர்மா என்பவரும் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி மலேசிய அரசுக்கு சொந்தமான போயிங் 777-200 ரக விமானம் நேற்று அதிகாலை புறப்பட்டது. காலை 6.30 மணியளவில் பீஜிங் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த விமானம் புறப்பட்டு சென்ற சுமார் 2 மணி நேரத்துக்குள் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது.

இதனால் பதற்றமடைந்த கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானம் தொடர்பு எல்லைக்குள் இருந்து மாயமாகி விட்டதாக அறிவித்தனர். இதற்கிடையில், வியட்நாமின் தோ சூ தீவில் இருந்து 153 மைல் தொலைவில் உள்ள தென் சீனக் கடலுக்குள் அந்த விமானம் விழுந்து விபத்தில் சிக்கியது தெரிய வந்தது.
இந்தப் பயங்கர விபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் 5 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த பெண் என்றும் தெரிய வந்துள்ளது.
அவரது பெயர் சந்திரிகா சர்மா (51). ஹரியானாவைச் சேர்ந்த சந்திரிகா தற்போது கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் உறுப்பினரான சந்திரிகா மங்கோலியாவில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அவர் மலேசியாவில் இருந்து பீஜிங் செல்லும் விமானத்தில் பயணித்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications