கடல் உணவில் காண்டம்: நஷ்ட ஈடு கேட்டு 3 பெண்கள் வழக்கு
பீஜிங்: சீனா ஹோட்டல் ஒன்றில் ஆர்டர் செய்த கடல் உணவில் ஆணுறை இருந்த காரணத்தால் அதிர்ச்சியடைந்த பெண்கள் நஷ்ட ஈடு கேட்டு வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள கடல் உணவகம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மே லியாங் என்ற பெண், தனது தோழிகள் இருவருடன் சாப்பிட சென்றார். அவர்கள் வறுத்த மீன் வகை உணவு ஒன்றை ஆர்டர் செய்தனர்.
அவர்கள் கேட்ட உணவு சிறிது நேரத்தில் பரிமாறப்பட்டது. அந்த உணவை பெண்கள் மூவரும் மிக ஆவலுடன் சாப்பிட்டனர். அந்த உணவில் ஒரு ஆணுறை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை பார்த்ததும் சப்பிட வந்த மூன்று பெண்களில் ஒருவர் வாந்தி எடுத்தார். இன்னொரு பெண்ணுக்கு வயிறு ஏற்பட்டது.
உடனடியாக உணவை சப்ளை செய்தவரையும், ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் யீ சி தெங் ஆகியோரை அழைத்து புகார் கூறினர்.
ஹோட்டல் நிர்வாகம் தங்களுக்கு நஷ்ட ஈடு தரவேண்டும் என்று அந்த மூன்று பெண்களும் கோரிக்கை விடுத்தனர்.ஆனால் இதற்கு ஹோட்டல் நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை.
அவர்கள் கேட்கும் தொகை அதிகம் என்று கூறியதோடு, அந்த மூன்று பெண்கள்தான் தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த ஆணுறையை உணவில் கலந்துவிட்டு நாடகமாடுவதாக கூறினர்.
இதுகுறித்து காவல்துறையினர்களிடம் புகார் அளிக்கப்பட்டு, தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications